Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#8
அன்று மாலை தினேஷ் எங்கள் வீட்டிற்கு வந்து விளையாடுவதற்கு அருகில் இருக்கும் மைதானத்திற்கு செல்லலாம் என அழைத்தான்.

எனக்கு செல்வதற்கு ஆசையாக இருந்தது, ஆனால் வீட்டில் என்ன பதில் சொல்வார்கள் என்று அவர்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
 
"பாத்து பத்திரமா போயிட்டு வா" என்று அம்மா சிரித்த முகத்துடன் கூறினார்கள். கூடவே அப்பாவும் தினேஷுடன் செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.
 
எப்படி இவர்கள் விளையாட அனுமதி அளித்தார்கள் என்று மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை பையன் வளந்துவிட்டான், படிப்பு விஷயத்திலும் தெளிவாக இருக்கிறான். இதற்குமேல் இவனை வெளியில் செல்வதற்கு தடை போடக்கூடாது என முடிவு செய்துள்ளார்களோ என்று யோசித்தேன்.
 
அதோடு இருபாலர் பள்ளியில் சேர்த்துவிட்டதே என்னுடைய கூச்ச சுபாவத்தை மாற்றுவதற்கான புதிய முயற்சியாக இருக்கலாம் என அவர்களின் செயல்களை வைத்து புரிந்துக்கொண்டேன்.
 
அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எந்த விதத்திலும் கெடுத்துவிடக்கூடாது. படிப்பில் மட்டும் கவனமுடன் இருக்க வேண்டும் என முடிவுசெய்து மகிழ்ச்சியுடன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தினேஷுடன் கிளம்பினேன்.
 
தினேஷ் அவனுடைய மிதிவண்டியை இயக்கினான் நானும் அவனுக்கு அருகிலேயே வண்டியை இயக்கிக்கொண்டு இருவரும் சாலையில் பயணம் செய்தோம். அப்போது நான் பேச ஆரம்பித்தேன்.
 
"தினேஷ்! அந்த க்ரவுண்ட் எங்க இருக்கு?"
 
"இங்கதான் பக்கத்துல இருக்கு! பத்து நிமிஷத்துல போயிடலாம்!"
 
"ஹ்ம்ம்... அங்க என்னலாம் விளையாடுவீங்க?"
 
"கிரிக்கெட் தான் விளையாடுவோம்!"
 
"எனக்குதான் ஒன்னும் விளையாட தெரியாதே! நான் என்ன பண்றது?"
 
"டேய் விக்ரம்! அதுக்குதான் உன்னைய முதல்ல கூட்டிட்டு போறேன்! ஒன்னும் கவலப்படாத! எங்க கூட நீயும் விளையாடு கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் சீக்கிரம் கத்துக்குவே!" என்று தைரியம் சொன்னதும் மகிழ்ச்சியுடன் அந்த மைதானத்தை அடைந்தோம்.
 
அங்கே எங்களை போன்று நிறைய பேர் வந்திருந்தனர். அனைவரும் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்று தினேஷ் அறிமுக செய்தான். நான் என்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டேன்.
 
பின்பு இரண்டு அணிகளாக பிரிந்து விளையாட தொடங்கினர். நானும் அவர்களுடன் ஈடுபாடுடன் விளையாடினேன். பேட்டிங் செய்வதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தார்கள். ஆனால் ஒரு பந்தைகூட அடிக்க முடியவில்லை
 
தினேஷ் என்னை பற்றி அவர்களிடம் சொன்ன காரணத்தினால் என்னை யாரும் கிண்டல் செய்யவில்லை. மேலும் பந்தை சரியாக அடிப்பதற்கு கைதட்டி என்னை ஊக்குவித்தனர்.
 
உடனே கடைசி பந்தை வேகமாக அடித்தேன் அது பெளண்டரிக்கு சென்றது. எல்லோரும் கூச்சலிட்டு என்னை பாராட்டினர். இதுவரை சாதிக்க முடியாத ஒன்றை முதன்முதலாக சாதித்துவிட்டேன் என்று மனதில் மகிழ்ச்சி பொங்கியது.
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 20-12-2023, 09:26 PM



Users browsing this thread: 2 Guest(s)