Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#7
சிறு வயதில் இருந்து பள்ளி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்து மீண்டும் படிக்க தொடங்கி விடுவேன்.

மற்ற நண்பர்கள் வந்து என்னை வெளியில் சென்று விளையாட அழைத்தாலும் என்னுடைய அம்மா செல்வதற்கு அனுமதி தரமாட்டார்கள். இதனாலேயே எனக்கு பள்ளியில் எந்த நண்பர்களும் அமையவில்லை.
 
இப்படி செய்வதால் எனக்கு அம்மா மீது முதலில் கோபம் வந்தது. ஆனால் ஒரே பிள்ளை என்ற காரணத்தினால் நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் செய்கிறார்கள் என பிறகு புரிந்துக்கொண்டேன்.
 
மேலும் வீட்டில் எனது பெற்றோர் நண்பர்கள் போல் பழகுவதால் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் பெண்களிடம் பழகுவதற்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. அதனால்தான் என்னவோ இன்று பெண்கள் இருக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கூறியதும் அதிர்ச்சியாக இருந்தது.
 
இவ்வாறு சிந்தித்துக்கொண்டு அங்கேயே சிறிது நேரம் நின்றேன். அப்போது யாரோ வீட்டிற்குள் வருவது போல் இருந்தது. அப்பா உடனே யாரென்று பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.
 
சிறிது நேரம் கழித்து என்னையும் அழைத்தார். எதற்காக என்னை அழைக்கிறார் என்று புரியாமல் கொஞ்சம் தயக்கத்தோடு சென்றேன்.
 
அங்கே அவருடைய நண்பர் வந்திருந்தார். கூடவே அவரின் மகனும் வந்திருந்தார். இருவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
 
இவர்களும் இந்த தெருவில்தான் இருக்கிறார்கள், அவருடைய நண்பரின் மகனும் நான் படிக்கவிருக்கும் பள்ளியில்தான் படிக்கிறான். அவனும் ஒரே வகுப்புதான். இருவரும் சென்று பேசிக்கொள்ளுங்கள் என்று என்னுடைய தந்தை கூறினார்.
 
இப்போது கொஞ்சம் கவலையை மறந்து அவனை என்னுடைய அறைக்கு அழைத்து சென்று பேசினேன்.
 
"ஹேய்! ஐ ஆம் விக்ரம்!”
 
"என்னோட பேரு தினேஷ்!”
 
“ஹ்ம்ம்... நைஸ் நேம்!”
 
“ஆமா! பெரிய வெள்ளைகாரதுரை! இங்கிலீஷ்ல தான் பேசுவீங்களோ! ஒழுங்கா தமிழ்ல பேசுடா!" என்று தினேஷ் கிண்டல் செய்தான்.
 
இதுவரை யாரும் என்னிடம் இப்படி கிண்டல் செய்து பேசியதில்லை. இவன் இப்படி பேசியதும் முதல் முறையாக எனக்கொரு நண்பன் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
 
“சரி தினேஷ் இனிமே தமிழ்லயே பேசுறேன்” என்று சிரித்தேன்.
 
இப்படியே சிறிது நேரம் பேசியதில் அவனை பற்றி நானும் என்னை பற்றி அவனும் நன்றாக புரிந்துகொண்டோம்.
 
பெண்களிடம் பேசினால் எனக்கு கூச்சம் ஏற்படும் என்பதை மட்டும் தவிர்த்து என்னை பற்றிய அனைத்து விசயங்களும் தெரிந்து கொண்டான். அதன் பிறகு அவனுடைய தந்தை அழைத்ததும் வீட்டிற்கு கிளம்பி சென்றான்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 20-12-2023, 09:26 PM



Users browsing this thread: 1 Guest(s)