Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#5
அவருக்கு பணி இடமாறுதலுக்கான ஆணை வந்துள்ளது. எங்கள் ஊரில் இருந்து தொலைவில் இருக்கும் விழுப்புரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்குள் செல்ல வேண்டும் என்று கூறினார்.

சிறு வயதில் இருந்து இங்கேயே இருந்துவிட்டு, இப்போது தெரியாத ஒரு ஊருக்கு செல்ல வேண்டுமே என்று நினைக்கும்போது கவலையாக இருந்தது.
 
"அப்பா! நெக்ஸ்ட் இயர் ப்ளஸ் டூ படிக்கணும்! இந்த நேரத்துல திடீர்னு ஸ்கூல் சேஞ்ச் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்குமே"
 
"விக்ரம்! நீ ஒன்னும் கவலைப்படாத! நான் எல்லாம் விசாரிச்சுட்டேன்! நாம புதுசா போக போற விழுப்புரத்துல ஒரு நல்ல ஸ்கூல் இருக்குது! அங்கதான் இனிமே நீ படிக்கணும்!" என்று உறுதியாக கூறினார்.
 
பின்பு நானும் வேறு வழியில்லாமல் அந்த புதிய பள்ளியில் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
 
அடுத்தநாள் காலை எல்லோரும் வீட்டை காலி செய்துகொண்டு விழுப்புரத்திற்கு பயணம் செய்தோம். மாலையில்தான் அந்த ஊருக்கு போய் சேர்ந்தோம்.
 
ஏற்கனவே அப்பாவின் நண்பர் மூலம் ஒரு நல்ல வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தனர். அங்கு சென்று எங்களுடைய பொருட்கள் அனைத்தையும் சரி செய்து எனக்கென்று ஒரு அறையை தேர்வு செய்துக்கொண்டேன்.
 
ஒரு வழியாக வீட்டை ஒழுங்குப்படுத்தி தூங்குவதற்கு இரவு ஆனது, அதனால் சாப்பிட்டுவிட்டு என்னுடைய அறைக்கு சென்று தூங்கினேன்.
 
அடுத்தநாள் காலை அம்மா என்னை சீக்கிரமாக எழுப்பினார்கள். நேற்று நீண்டதூரம் பயணம் செய்துவந்த காரணத்தினால் மிகவும் சோர்வாக இருந்தது.
 
"அம்மா! உடம்பு ரொம்ப வலிக்குது! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு எந்திருக்கிறேன்!"
 
"விக்ரம்! உன்னைய புது ஸ்கூல்ல சேர்த்து விடனும்! உங்க அப்பாவுக்கு இன்னிக்கு மட்டும்தான் லீவ் இருக்கு! ஒழுங்கா எந்திரிச்சு குளிடா!" என்று திட்டினார்கள்.
 
எனக்கு தூங்குவதற்கு வழியில்லை என்று புரிந்தது அதனால் சரி என்று கூறிவிட்டு எழுந்து குளிப்பதற்கு சென்றேன். அதன்பின் பெற்றோருடன் அந்த புதிய பள்ளிக்கு சென்றேன்.
 
நான் ஏற்கனவே படித்த பள்ளியைவிட இது மிகவும் பெரியதாக இருந்ததால் பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது.
 
உள்ளே சென்று பார்த்தோம் பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் கூட்டம் எதுவும் இல்லை. நாங்கள்தான் அட்மிசன் போடுவதற்கு முதல் ஆளாக வந்திருக்கிறோம் என்று புரிந்துகொண்டேன்.
 
என்னுடைய மதிப்பெண்ணை பார்த்து அங்கு இருந்த ஆசிரியர்கள் எல்லோரும் வெகுவாக பாராட்டினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சந்தோசத்தோடு அட்மிசன் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 20-12-2023, 09:25 PM



Users browsing this thread: 3 Guest(s)