29-11-2023, 02:55 PM
இருந்தாலும் அவன் அதிர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ளவில்லை
நேராக லாரி நிறுத்தி வைத்து இருந்த இடத்துக்கு போனான்..
எப்படியும் டிரைவரும் கிளீனரும் லாரி எடுக்க திரும்பி வருவார்கள்..
அவர்கள் இருவரையும் அடித்து போட்டு அவர்கள் ரத்தத்தை எடுத்து சதா அக்காவின் தம்பி ஆவிக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு பண்ணான் சுரேஷ்
லாரியில் இருந்த ஒரு பெரிய ஸ்பேனரை எடுத்தது . கொண்டான்.
அதை இறுக்கமாக கையில் பிடித்து கொண்டு அவர்கள் வரவிற்காக காத்திருந்தான்..
ரொம்ப நேரம் ஆகியும் அவர்கள் இருவரும் லாரிக்கு திரும்பி வரவில்லை..
அப்போதும் பெரும் புயலும் காற்றும் வீச ஆரம்பித்தது..
கிளைமட் நல்லாதானே இருந்தது.. திடீரென்று ஏன் இப்படி இடியும் மின்னலும் அடிக்கிறது என்று யோசித்தான் சுரேஷ்
அப்போது.. சுரேஷ்.. சுரேஷ்.. என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது..
சுற்றும் முற்றும் பார்த்தான் சுரேஷ்
ஆனால் அங்கே யாரும் இல்லை..
மீண்டும் சுரேஷ் சுரேஷ்.. என்ற மெல்லிய சத்தம் மட்டும் கேட்டது..
சுரேஷ்க்கும் கொஞ்சம் பயம் வந்து விட்டது..
இந்த இருட்டு நேரத்துல நடுநிசில காத்து கருப்பு எதுவும் வந்து இருக்குமோ.. என்று பயந்தான்..
காத்து அடித்தது.. ஆனால் கருப்பு எதுவும் இல்லை..
ஒரே ஒரு வெள்ளை உருவம் மட்டும் அவனை நோக்கி அசைந்து அசைந்து வந்தது..
ஒரு வெள்ளை பைஜாமா அணிந்த உருவம்..
காற்றில் மிதந்து வந்தது..
அவன் இருந்த திசையை நோக்கி மெல்ல ஊர்ந்து வந்தது..
அந்த உருவம் அருகில் வந்ததும்தான் கவனித்தான்.. அது அவன் தந்தை.. வளர்ப்பு தந்தை சாய்குமாரின் ஆவி உருவம்..