02-10-2023, 05:50 PM
(02-10-2023, 11:52 AM)raasug Wrote: தமிழில் "இயல் இசை நாடகம்" என்று மூன்று வகையாக ஒரு நிகழ்ச்சியை விவரிக்கலாம். வெறும் நாடகம் மட்டுமே இருந்தால் கதை சுமாரகத்தான் இருக்கும். கூடவே கொஞ்சம் இயல் அதாவது கட்டுறை வடிவம், அதில் முன்னுறை இருக்கும். இது நீங்க இப்போது போட்டிருப்பது.
அடுத்தது நிகழ்ச்சி, அது நாடகம் போல் இருக்கும். காட்சிகள் 1, 2, 3 என்று வரும். ஆங்காங்கே கொஞ்சம் இசை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். எப்படி ? ஒரு பொருத்தமான சினிமா பாடல் 2 வரிகள். வாசகர்கள் காதில் இசை கற்பனையில் ஒலிக்கும்.
உதாரணமாக யமுனா வை பார்த்தவுடன் விமானத்தில் அருகே அமர்ந்திருக்கும் நபருக்கு ஒரு பழைய சினிமா பாடல் நினைவுக்கு வந்தது.
கட்டழகு பாப்பா கண்ணுக்கு !
இந்த கள்ளத் தனம் ஏனோ பெண்ணுக்கு !
இங்கே பட்டுக் கொண்டதோ ? இல்லை சிக்கிக் கொண்டதோ ?
இந்த 3 வரிகள் போதும். மீத பாடல்களை விரும்பும் வாசகர்கள் யுடியூபில் போய் கேட்டுக் கொள்வார்க்ள்.
நீங்கள் சேலஞ்சில் தோற்கவில்லை. ஜெயித்திருக்கிறீர்கள் எப்படி ? கதையை மேலும் மெருகூட்டுவது எப்படி என்று கண்டு பிடித்திருக்கிறீர்கள்.
இப்போது நீங்க போட்டிருக்கும் முன்னுறை வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.
தொடருங்க அடுத்த பாகங்களை
ஆலோசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தில்தான் அடுத்த அடுத்த பகுதிகளை எழுத ஆர்வம் ஏற்படுகிறது நண்பா..
ஒதுக்க பட்ட எனக்கும் பெரிய மனது பண்ணி ஆதரவு அளிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி
இயல் இசை நாடகத்தை பற்றிய விளக்கம் மிக அருமை + உண்மை
தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா