Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#53
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஹலோ பாண்டி.. சொல்லுடா..

யமுனாவும் நீயும் எங்கேடா இருக்கீங்க..?

இங்கே டாக்டர் கிளினிக் வரை வந்தோம்டா

ஏண்டா மணி.. என்னை ரெஸ்டாரண்ட் வரச்சொல்லிட்டு நீ அவ கூட ஊரு ஊரா சுத்துறியா..?

டேய் மச்சான்.. கோவப்படாதடா..

போலீஸ் ஸ்டேஷன் வந்து இருந்த அவளை நான்தான் உனக்காக ரெஸ்டாரண்ட் வரவெச்சேன்..

போறேன் போறேன்னு சுடுதண்ணிய கால்ல ஊத்துனது மாதிரி துடிச்சிக்கிட்டு இருந்தா..

நான்தான் ஒரு கப் காப்பியாவது குடிச்சிட்டு போங்கன்னு சொல்லி.. நீ வர்றவரை அங்கேயே அவளை உக்கார வைக்கலாம்னு எவ்ளோவோ முயற்சி பண்ணிட்டு இருந்தேன்..

ஆனா அதுக்குள்ளே அவள் மகன் சித்தார்த்க்கு அடிபட்டுடுச்சின்னு வீட்ல இருந்து போன் வரவும் வீட்டுக்கு வந்தோம்..

டேய் மணி.. அட்லீஸ்ட் வீட்லயாவது கொஞ்சம் வெய்ட் பண்ணி இருக்கலாம்லடா.. நான் இங்கே வந்து ஏமாந்து போய் தவிச்சிட்டு நிக்கிறேன்..

டேய் டேய் பாண்டி.. அதாண்டா.. நீ ரெஸ்டாரண்ட்ல இருந்து போன் பண்ணப்போ.. நாங்க வீட்ல இருந்து டாக்டர் கிளினிக்கு போறோம்னு சொல்றதுக்குள்ள நீ கோவப்பட்டு போன் கட் பண்ணிட்ட..

இப்போ அவ வீட்ல நின்னுட்டு கத்துற..

சரி விடுடா மணி.. இப்போ அந்த டாக்டர் கிளினிக் எங்கே இருக்கு..

இரு இரு லொகேஷன் அனுப்புறேன்.. வா

டேய் மணி.. நான் அங்கே வர்றதுக்குள்ள அவளை அங்கே இருந்து வேற எங்கேயாவது ஓட்டிட்டு போயிடாத.. ஏதாவது சாக்கு சொல்லி அங்கேயே வெய்ட் பண்ண வை

சரி சரி ட்ரை பண்றேன்..

ட்ரை எல்லாம் பண்ணாத.. எப்படியாவது நான் அங்கே வர்றவரை அவ அங்கேயே இருக்குற மாதிரி பார்த்துக்க..

அவளை ஒரு முறையாவது நேர்ல பார்த்தாதான் எனக்கு இன்னைக்கு தூக்கம் வரும்டா மணி..

சரி.. வா பாண்டி.. நான் வெய்ட் பண்றேன்..

தொடரும் 31
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 06-09-2023, 01:07 PM



Users browsing this thread: 9 Guest(s)