Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#36
(03-09-2023, 09:25 AM)Vandanavishnu0007a Wrote: சார் நான் உள்ள வந்துட்டேன்.. நீங்க எங்கே இருக்கீங்க.. உங்களை எந்த டேபிளயும் காணம்  

உங்க ரைட் சைட் ஒரு தனி கண்ணாடி டோர் இருக்கு பாருங்க யமுனா 

ஆமாம் சார் இருக்கு.. பேம்லி ரூம்ன்னு போட்டு இருக்கு 

ம்ம்.. அதுக்குள்ள வாங்க 

ம்ம்.. சரி சார் 

இங்க.. இங்க பாருங்க.. கைகாட்டுறேன் பாருங்க.. 

ஹலோ சார்.. 

ஹா ஹா.. போன்லதான் ஆயிரம் ஹலோ சொல்றீங்க நேர்லயுமா 

வாங்க எதிர்ல உக்காருங்க 

இல்ல சார் வேண்டாம் இருக்கட்டும்.. ஸ்லிப் குடுத்தீங்கன்னா நான் வாங்கிட்டு கிளம்பிடுவேன் 

என்ன யமுனா.. பிளீஸ் உக்காருங்க.. ஜஸ்ட் ஒரு 2 மினிட்ஸ்.. எனக்காக 

ம்ம்.. ஓகே சார்.. ஸ்லிப் சார் ?

இருங்க.. இருங்க.. அவசர படுறீங்களே.. 

முதல்ல ஏதாவது சாப்பிடுங்க.. அப்புறம் ஸ்லிப் வாங்கிக்கலாம் 

இல்ல.. பரவாயில்ல.. எனக்கு எதுவும் வேண்டாம் சார் 

பிளீஸ் எனக்காக.. 

சார்.. ஐயோ எதுக்கு பிளீஸ் வார்த்தை எல்லாம் உபயோகிக்கிறீங்க.. 

சரி சொல்லுங்க யமுனா.. என்ன ஆர்டர் பண்ணட்டும் 

உங்க இஷ்டம் சார்.. 

எனக்கு காபி சொல்றேன்.. உங்களுக்கு ஐஸ் கிரீம் சொல்லவா ?

தொடரும் 21

இல்ல.. எனக்கும் காபியே சொல்லிடுங்க சார்.. 

அட.. உங்களுக்கு ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு நினைச்சேன்.. 

அதென்ன சார்.. பெண்கள்ன்னா ஐஸ் க்ரீம் மட்டும்தான் சாப்பிடணுமா? 

அட.. ஆள் பார்க்க சீரியஸா இருக்கீங்க.. ஆனா ஜோக் எல்லாம் அடிக்கிறீங்க 

சார் நான் சீரியஸ் டைப்தான்.. காபி ஆர்டர் பண்றீங்களா பிளீஸ் 

ரொம்ப அவசரத்துல இருக்கீங்களோ.. பேரர்.. 

எஸ் சார்.. ஆர்டர் பிளீஸ் 

ரெண்டு காபி 

ஓகே சார்.. 

ம்ம்.. அப்புறம் சொல்லுங்க யமுனா.. எதுக்காக பாப்போர்ட் அப்பளை பண்ணீங்க.. எந்த ஊரு போகப்போறீங்க 

மலேஷியா சார் 

என்ன விஷயமா மலேஷியா போறீங்க.. ஜாப்க்கா.. இல்ல அங்கே சொந்தகாரங்க யாரையாவது பார்க்க போறீங்களா 

ஜாப்க்கு.. 

நான் எவ்ளோ பெரிய கேள்விகள் எல்லாம் கேக்கறேன்.. நீங்க மணிரத்னம் பட டயலாக் மாதிரி ஒன் வேர்டுலேயே பதில் சொல்றீங்க 

நான் யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டேன் சார்.. ரிஸர்வ்ட் டைப் 

தோ.. இவ்ளோ வார்த்தை பேசிட்டிங்களே.. அது போதும்.. நீங்களே உங்களை ரிசர்வுடுன்னு சொல்லிக்கிறீங்க 

சார் காபி.. 

தேங்க்ஸ் பேரர் 

யமுனா.. இந்தாங்க எடுத்துக்கங்க.. 

தேங்க்ஸ் சார்.. 

தொடரும் 22
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 03-09-2023, 10:55 AM



Users browsing this thread: 1 Guest(s)