05-08-2023, 04:11 PM
(12-07-2023, 08:00 AM)Vandanavishnu0007a Wrote: பியூன் கோபால் போன திசை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான்
கோபால் நேராக ஒரு மெடிக்கல் ஷாப் பக்கம் போனான்
நைட்ல தூக்கமே வர மாட்டேங்குது தூக்க மாத்திரை தாங்கன்னு கேட்டான்
டாக்டர் பிரிஷ்கிரிப்ஷன் இல்லாம தூக்க மாத்திரை எல்லாம் தர முடியாது.. என்று கடைக்காரன் சொன்னான்
கோபால் யோசித்தான்
மெடிக்கல் கடையை விட்டு வெளியே வந்தான்
தன்னுடைய நோட் புக்கில் இருந்து ஒரு பேப்பரை கிழித்தான்
அதில் தூக்க மாத்திரை என்று எழுதினான்
கீழே டாக்டர் கோபால் என்று கையெழுத்து போட்டான்
கோபால் கையெழுத்து அவ்ளோ நல்லா இருக்காது
அவன் எழுதும் எழுத்து யாருக்கும் புரியாது
ஏன்.. சொல்லப்போனால் அவனுக்கே புரியாது
அந்த எழுதிய துண்டு பேப்பரை இப்போது மெடிக்கல் ஷாப் கடைக்காரனிடம் நீட்டினான்
கடைக்காரன் அந்த துண்டு சீட்டை வாங்கி படித்து பார்த்தான்
கோபாலின் கிறுக்கலான கையெழுத்து டாக்டர் கையெழுத்து போலவே புரியாத புதிராக இருந்தது
அதனால் கடைக்காரன் ஏமாந்து விட்டான்
கோபாலிடம் தூக்க மாத்திரை எடுத்து கொடுத்தான்
கோபால் அந்த மாத்திரையை வாங்கி கொண்டான்
அப்படியே அருகில் இருந்த பொட்டி கடைக்கு போனான்
அண்ணே ஒரு கோலி சோடா குடுங்க என்று கேட்டான்
பொம்பள சோடா வேணுமா.. ஆம்பள சோடா வேணுமா.. என்று கடைக்காரன் கேட்டான்..
பொம்பள சோடான்னா என்ன.. ஆம்பள சோடானா என்ன.. என்று கோபால் புரியாமல் கேட்டான்..
பொம்பள சோடானா குண்டு இல்லாம பிளைனா இருக்கும்..
ஆம்பள சோடானா குண்டு இருக்கும்.. என்று விளக்கமாக கடைக்காரன் சொன்னான்..
சரி சாகப்போறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. ஒரு பொம்பளை கோலி சோடாவே குடுங்கண்ணே.. கிளுகிளுப்பை குடிச்சிட்டு சாகுறேன்.. என்றான் கோபால்
இந்த தம்பி.. என்று கோலி இல்லாத சோடாவை எடுத்து நீட்டினான் கடைக்காரன்
மெடிக்கல் ஷாப்பில் இருந்து வாங்கிய தூக்க மாத்திரைகளை வாயில் போட்டுக்கொண்டான் கோபால்
கோலி சோடாவை கடகடவென்று வாயில் ஊற்றி அத்தனை மாத்திரையையும் முழுங்கினான்..
தூரத்தில் காலேஜ் பியூன் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கோபால்.. இரு.. சோடாவை குடிச்சிடாத.. என்று கத்திகொண்டே அவனை நோக்கி ஓடி வந்தான்..
ஆனால் கோபால் அதற்குள் மாத்திரையையும் முழுங்கி.. முழு கோலி சோடாவையும் குடித்து முடித்து ஹேப்ப்ப்ப்... என்று ஏப்பம் விட்டான்..
பியூன்னுக்கு பின்னால் இரட்டை ஜடை வந்தனாவும் ஓடி வந்தாள்
சோடா குடித்த அடுத்த செக்கெண்டே கோபால் தூங்கி வழிய ஆரம்பித்தான்..
பொத் என்று கீழே விழ போனவனை பியூன் ஓடி வந்தது தாங்கி பிடித்தான்..
ரெட்டை ஜடை வந்தனா அவர்கள் அருகில் மூச்சிரைக்க ஓடி வந்தாள்
பியூன் கோபாலுக்கு என்ன ஆச்சி.. என்று கேட்டாள்
நம்ம பிரின்சிபால் இவனை காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்ண அவமானம் தாங்க முடியாம மெடிக்கல் ஷாப்ல தூக்க மாத்திரை வாங்கி சாப்டுட்டு.. அது ஜீரணம் ஆகுறதுக்கு கோலி சோடா வாங்கி குடிச்சிட்டான்ம்மா நம்ம கோபாலு.. என்று அழுதுகொண்டே சொன்னார்
ஐயோ.. கோபால் குடிச்சது ஆம்பள சோடாவா.. பொம்பள சோடாவா.. என்று பதறியபடி கேட்டாள் ரெட்டை ஜடை வந்தனா
தேரிலேம்மா.. கடைக்காரனிடம் கேட்டால்தான் தெரியும்.. என்றான் காலேஜ் பியூன்
வந்தனா கடைக்காரனிடம் சென்றாள்
கடைக்காரரே.. கோபால் வாங்கி குடிச்சது பொம்பளை சோடாவா.. ஆம்பளை சோடாவா.. என்று கேட்டாள்