01-08-2023, 11:07 PM
ஏய் நாயே.. நாயே.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடி.. புள்ள ஆசையா வாயை திறந்தான்.. திருட்டு பூனை மாதிரி குறுக்க வந்து அவனுக்கு ஊட்ட வந்த நண்டை நீ புடுங்கி தின்னுற..
அவன் பாவம்.. எப்போவாவதுதான் நம்ம வீட்டுக்கு வந்து நான்வெஜ் சாப்பிடறான்..
நீதான் டெயிலி கொட்டிக்கிறல்ல.. உனக்கென்னடி அவசரம்..
ரோஸ்லின் எஸ்தரை சராமாரியாக திட்ட ஆரம்பித்தாள்
ஏம்மா.. விஷ்ணு என்ன உன் வயித்துல பிறந்த மகனா.. அவன் நம்ம வீட்டுக்கு வந்தான்னா இப்படி அவனை விழுந்து விழுந்து கவனிக்கிற..
நான் நீ பெத்த பொண்ணு.. என்னைக்காவது இப்படி மீனுக்கு முள்ளு எடுத்து.. இல்ல சிக்கன் லெக்பீஸ் எடுத்து எனக்கு வாய் நிறைய ஊட்டி விட்டு இருக்கியா.. என்று எஸ்தரும்.. வாயில் நண்டு குதப்பி தின்று கொண்டே எதிர் கேள்வி கேட்டாள்
எருமை மாதிரி வளர்ந்து இருக்க.. நீ தின்னாத நான்வெஜ் ஐட்டமே இல்லடி.. உனக்கு நான் வேற ஊட்டி விடணுமா..
பாவம் விஷ்ணு ஐயர் வீட்டு புள்ள.. ஆசை பட்டு கேட்டானேன்னு.. அவனுக்காக ஸ்பெஷல்லா நண்டு செஞ்சி அவனுக்கு உரிக்க வராதேன்னு நானே என் கையாள நண்டு உறிச்சி தரேன்..
நீ குறுக்க வந்து இப்படி அநியாயம் பண்றியேடி.. என்று மீண்டும் ரோஸ்லின் தன் மகளை திட்டினாள்
அம்மா என்னை ரொம்ப திட்டாத.. நான் நன்-சிஸ்டர் ஆக போன்றவ.. பியூச்சர்ல சர்ச்சைக்கு வரும்போது.. நீயும் அப்பாவும் என்கிட்டதான் பாவமன்னிப்பு கேட்டு.. ஆசீர்வாதம் வாங்கணும்.. அதை மனசுல வாசிக்க.. என்று கிண்டலாக சொன்னாள் எஸ்தர்