26-07-2023, 01:26 PM
(This post was last modified: 10-08-2023, 05:47 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-06-2023, 02:13 PM)Vandanavishnu0007a Wrote:
ஏம்மா வடிவு.. நம்ம வீட்டு வேலைக்காரி பேரு வள்ளியா
ஆமாங்க..
சார் ஆமா எங்க வீட்டு வேலைக்காரிதான் வள்ளி.. அவளுக்கு என்ன ஆச்சி..
உங்க வீட்டு வேலைக்காரி கொலை செய்யப்பட்டு இருக்காங்க.. என்றார் இன்ஸ்பெக்டர்..
ஐயோ என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்ட்டர்.. நேத்து கூட எங்க வீட்டுக்கு வந்துட்டு போனாளே.. என்று உள்ளே இருந்து வடிவுக்கரசி ஓடி வந்தாள்
ஆமா.. வள்ளி கடைசியா உங்க வீட்டுக்குதான் வந்துட்டு போய் இருக்கா.. அதுக்கு அப்புறம்தான் இந்த கொலை நடந்து இருக்கு..
நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஷன் வரை வர முடியுமா..
ஐயோ இன்ஸ்பெக்ட்டர்.. எங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சதாசிவமும் வடிவுக்கரசியும் ஒரே நேரத்தில் அலறினார்கள்..
மிஸ்டர் சதாசிவம்.. இது ஒரு சின்ன பார்மாலிட்டி என்கொய்ரிதான்..
நீங்க கொலை செஞ்சீங்கன்னு நாங்க சொல்லவரால.. ஸ்டேஷன்ல வச்சி ஜஸ்ட் சில கேள்விகள் கேட்டுட்டு வீட்டுக்கு அனுப்பிடுவோம்.. அவ்ளோதான்
வாங்க எங்ககூட.. என்று இன்ஸ்பெக்ட்டர் சதாசிவத்தை பார்த்து சொன்னார்..
சரி வரேன் இன்ஸ்பெக்ட்டர்.. என் மனைவியும் வரணுமா.. என்று கொஞ்சம் சந்தேகமாக கேட்டார்..
ஆமா கண்டிப்பா.. அவங்கதான் முக்கியமா வரணும்
காரணம்.. அவங்களுக்குதான் வள்ளியை பற்றி அதிகம் தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு..
சோ அவங்கதான் முக்கியமா வரணும்.. வாங்க போலாம்..
இருவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்கள்..
அதை பார்த்த அக்கம் பக்கத்தார்.. என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோ.. என்று பதட்டமாய் பார்த்தார்கள்..
ஜீப் ஸ்டேஷன் சென்று நின்றது..
சதாசிவத்தையும்.. வடிவுக்கரசியையும் உள்ளை அழைத்து சென்றார் இன்ஸ்பெக்டர்..
வடிவுக்கரசி அருகில் இரண்டு பெண் பி.சி நின்றுகொண்டார்கள்..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
அப்போது வடிவுக்கரசியின் போன் லேசாய் சிணுங்கியது..
இப்போ இந்த நேரத்துலயா போன் வரணும்.. என்று வடிவுக்கரசி தயங்கினாள்
எடுத்து பேசும்மா.. என்றாள் ஒரு பெண் பி.சி.
வடிவுக்கரசி சின்ன தயக்கத்துடன் தன்னுடைய மொபைல் போனை எடுத்து ஹலோ.. என்றாள்
அண்ணி நான்தான் அம்பிகா பேசுறேன்..
அம்பிகா குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது..