02-07-2023, 10:41 AM
(07-06-2023, 04:40 PM)Vandanavishnu0007a Wrote:
அதை கேட்டதும்.. ராஜாவுக்கும் ராணிக்கு.. இளவரசிக்கும் ரொம்ப பயம் வந்துடுச்சாம்..
அந்த கிளிக்கு ரொம்ப பாதுகாப்பு கொடுக்க ஆரம்பிச்சாராம் அந்த ராஜா
தினமும் தூங்க போறதுக்கு முன்னாடியும் மறுநாள் காலைல எழுந்ததும் முதல் வேலையா அந்த கிளி இருக்குற கூண்டுக்கு ராஜா ராணி இளவரசி மூணு பேரும் போய்ப்போய் பார்த்துட்டுதான் தூங்க போவாங்கலாம்.. காலைல அந்த கிளி மூஞ்சுலதான் விழிக்க போவாங்கலாம்..
இப்படியே 2-3 நாள் போச்சி..
ஒரு நாள் காலங்காத்தால அவங்க மூணுபேரும் கிளிக்கூண்டை பார்க்க போனார்களாம்..
ஒரே அதிர்ச்சி..
கூண்டுல இருந்த கிளியை கானம்..
ஐயையோ.. அந்த முனிவர் சொல்லிட்டு போனது போலவே.. இளவரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுடுமோன்னு ராஜா ரொம்பவும் பயந்தாராம்
கிளி செத்து போய்ட்டா பிரச்னை இல்ல..
ஆனா எங்கேயாவது உயிரோட வாழ்ந்துட்டு இருந்துச்சுன்னா.. நம்ம இளவரசிக்குள்ள ஆபத்து என்று நினைத்தார் ராஜா
உடனே தன்னுடைய சேவகர்களை கூப்பிட்டு ஒரு செய்தி கொடுத்து தண்டோரா போட்டு நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பு கொடுக்க சொன்னாராம்
தண்டோராகாரனும் தன்னுடைய தண்டோராவை கழுத்துல மாட்டிட்டு எடுத்துட்டு போய் ஊர் மக்கள் எல்லாம் கூடுற இடத்துல தண்டோரா போட்டு ராஜா சொன்ன செய்தியை சொல்ல ஆரம்பிச்சானாம்..
நம்ம நாட்டு இளவரசி ஆசையா வளர்த்த கிளி காணாம போயிடுச்சி..
அதை கண்டுபுடிச்சி திருப்பி கொண்டு வர்றவங்களுக்கு பரிசா.. நம்ம நாட்டு இளவரசியை கட்டிவச்சி இந்த நாட்டுல பாதி ராஜ்யத்தையும் கொடுப்பதாக நமது ராஜா உத்தரவு போட்டு இருக்காரு.. என்று தண்டொக்காரன் சொன்னானாம்..
அந்த ஊருல ஒரு ஏழை விவசாயி இருந்தானாம்..
அவனுக்கு ரெண்டு மகனுங்க இருந்தானுங்கலாம்..
ஒருத்தன் பேரு ஏமாளி.. இன்னொருத்தன் பேரு கோமாளி..
அந்த ரெண்டு அண்ணன் தம்பிகளும் தண்டோராகாரன் சொன்னதை கேட்டார்களாம்
உடனே அவர்களுடைய அப்பாவிடம் சென்று..
அப்பா அப்பா நாங்க ரெண்டுபேரும் இளவரசியோட கிளியை கண்டுபுடிக்க போறோம்.. நீங்க அதுக்கு அனுமதி குடுக்கணும்.. என்றார்களாம்..
டேய் மகன்களே.. நம்மளோ ஏழை விவசாயி நமக்கு எதுக்கு அரண்மனை விவகாரம் எல்லாம் என்று அந்த ஏழை விவசாயி தன்னுடைய மகன்களுக்கு தடைபோட்டாராம்
அதெல்லாம் முடியாது.. நாங்க அந்த காணாம போன கிளியை தேடி போயே ஆவோம்ன்னு.. ஏமாளியும் கோமாளியும்.. அடம் பிடிச்சாங்களாம்..
அந்த விவசாயியும் வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டாராம்
ஆனா 3 நிபந்தனை மட்டும் போட்டாராம்
அவனுங்க ரெண்டு பேரும் கிளியை கண்டு புடிக்கிறவரை வாய் திறந்து யார் கூடயும் பேசக்கூடாது
யார் சொல்றதையும் கேக்க கூடாது
யாரையும் பார்க்க கூடாதுன்னு சொல்லி அனுப்புனாராம்
இந்த நிபந்தனைகளை அவனுங்க மீறினா.. அந்த கிளி கிடைக்காது என்று எச்சரிக்கை பண்ணி அனுப்புனாராம்
ஏமாளியும் கோமாளியும் ஒரு துணிய எடுத்து அவனுங்க கண்ணுல கட்டிக்கிட்டு யாரையும் பார்க்காம காட்டுக்குள்ள கிளியை தேடி போனானுங்களாம்
காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போனதால இவனுங்களுக்கு செமையா பசி எடுத்ததாம்
அப்போது எங்கிருந்தோ மீன் குழம்பு வாசனை மூக்கை துளைத்ததாம்
அந்த வாசனையை மோப்பம் புடிச்சிட்டே அந்த திசை நோக்கி போனாங்களாம்
அந்த மீன் குழம்பு வாசனை காட்டுக்கு நடுல இருந்த ஒரு சின்ன குடிசைக்குள்ள இருந்து வந்துச்சாம்
அங்கே ஒரு வயசான கிழவி மீன் குழம்பு சமைச்சிட்டு இருந்தாளாம்
உங்களுக்கு என்னப்பா வேணும்ன்னு அந்த ஆயா கேட்டாளாம்
பசிக்குதுன்னு வாய் திறந்து கேக்க நினைச்சாங்களாம்..
ஆனா அப்பா சொன்ன நிபந்தனை நியாபகத்துக்கு வந்ததாம்
ஆனா பசியில் அவனுங்க ரெண்டுபேருக்கும் வயிறு வலிக்க ஆரம்பிச்சதாம்
சரி யாராவது ஒருத்தன் அப்பா சொன்ன நிபந்தனைய மீறிடலாம்..
அட்லீஸ்ட் மீதி இருக்க ஒருதனுக்காவது கிளி கிடைக்குமே.. என்று முடிவெடுத்தாங்களாம்
ஏமாளி கம்முன்னு இருந்தானாம்
கோமாளி வாய் திறந்து பசிக்குதுன்னு கேட்டானாம்
அந்த பாட்டி ரெண்டு பேருக்கும் மீன் குழம்பு ஊத்தி சோறு சட்டிய அவங்க முன்னாடி கொண்டு வந்து வச்சாளாம்
ஏமாளியும் கோமாளியும் சாப்புட போனாங்களாம்..
நீங்க என்னோட சமையலை சாப்பாடுனும்னா ஒரு நிபர்ந்தனை என்று சொன்னாளாம் பாட்டி
என்ன நிபர்த்தனைன்னு கோமாளி கேட்டானாம்
பாட்டி தன்னுடைய நிபர்ந்தனையை சொன்னாளாம்
அதை கேட்டு ஏமாளியும் கோமாளியும் அதிர்ச்சி அடைந்தார்களாம்