13-06-2023, 02:49 PM
நண்பர் சொன்ன கான்செப்ட் எனக்கு உடன்பாடு இல்லை நண்பா
இல்லை என்றால் இந்த கதையை நானே எப்போதோ முன்வந்து எழுதி இருப்பேன்..
காரணம் எத்தனையோ வெட்டிக்கதைகளை எழுதி கொண்டு இருக்கும் எனக்கு நமது அன்பு நண்பருக்காக நேரம் ஒதுக்கி கதை எழுதவா நேரம் இருக்காது..
நான் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் சும்மாதான் வெட்டியாக இருக்கிறேன்..
நேரம் நிறைய இருக்கிறது.. போர் அடிக்கிறது என்பதால்தான் ஒரு பொழுதுபோக்கிற்காக அதிக கதைகள் எழுதி வருகிறேன்..
ஆனால் நமது நண்பரின் விருப்பப்படி கருத்துப்படி ஒரு ஆண் பெண்ணுக்குள்ளும் பெண் ஆணுக்குள்ளும் உருமாற்றம் அடைவதில் எனக்கு அவ்ளோ விருப்பம் / ஆர்வம் இல்லை நண்பா
இல்லை என்றால் இவர் சொன்ன கான்செப்ட்டுக்கு நான் கதை எழுத ஆரம்பித்து இருப்பேன்
இவர் சொன்ன கரு போலதான் என்னுடைய கதை "எனக்குள் ஒருவன்" கதையிலும் கதை போக்கு இருக்கும்..
ஆனால் அதில் ஆள் மாறாட்டம் அப்பனுக்கும் மகனுக்கும் ஏற்பட்டு இருக்கும்..
அதில் இருவருமே ஆண்
அதனால் அந்த கதையை எழுதுவதற்கு எனக்கு மிக எளிதாக இருந்தது..
தற்போது வெளிவந்த பிச்சைகாரன் 2 திரைப்படத்தில் கூட அல்மோஸ்ட் என் கதை "எனக்குள் ஒருவன்" போலவே இரண்டு விஜய் அண்டனிக்கும் "மூளை" மாற்று சிகிச்சை செய்வார்கள்..
என்னுடைய கதையில் "இதய" மாற்று அறுவை சிகிச்சை என கதை போகும்..
அதில் மூளை.. எனது கதையில் இதயம்
அவ்ளோதான் வித்தியாசம்.
வேறு ஒரு நல்ல கரு யாராவது சொல்லி அதில் எனக்கு விருப்பம் + உடன்பாடு இருந்தால் கண்டிப்பாக அந்த நண்பருக்காக நான் கதை எழுத தயாராக உள்ளேன் நண்பா
நன்றி வாழ்த்துக்கள்