06-06-2023, 01:18 AM
(25-05-2023, 01:55 PM)Vandanavishnu0007a Wrote: டொக் டொக் டொக் என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது
வடிவுக்கரசி சென்று வாசல் கதவை திறந்தாள்
வெளியே போலீஸ் நின்று இருந்தது
காக்கி உடையை பார்க்கவும் பயந்து விட்டாள் வடிவுக்கரசி
என்னங்க.. என்னங்க.. நம்ம வீட்டுக்கு போலீஸ் வந்து இருக்குங்க
உள்ளே ஓடி போய் பதட்டத்துடன் சதாசிவத்திடம் சொன்னாள்
அமிர்தவல்லி செத்துட்டாள்ல.. அது விஷயமா என்கொயரிக்கு ஏதும் வந்து இருப்பாங்க நீ பயப்படாத நான் போய் பார்க்குறேன்..
வடிவுக்கு தைரியம் கொடுத்தபடியே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தார்
வாங்க உள்ள வாங்க சார்
இன்ஸ்பெக்டரும் சில கான்ஸ்டபிள்களும் சதாசிவம் வீட்டுக்குள் பூட்ஸ் காலுடன் தபதபவென்று நுழைந்தார்கள்
வள்ளியை உங்களுக்கு தெரியுமா..
அமிர்தவள்ளிதானே.. ஓ நல்லா தெரியுமே..
நான் டெய்லி அவளோடதான் வாக்கிங் போவேன்
சதாசிவம் பதட்டமில்லாமல் பதிலளித்தார்
என்னது உங்கவீட்டு வேலைக்காரி கூட நீங்க வாக்கிங் போவீங்களா..
இன்ஸ்பெக்டர் முகம் அஷ்டகோணலாய் மாறியது
வேலைக்காரியா.. நீங்க என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்.. நீங்க அமிர்தவள்ளியை பற்றித்தான் கேக்குறீங்க
சதாசிவம் இன்ஸ்பெக்டரை குழப்பத்துடன் பார்த்தார்
இல்ல.. நான் கேட்டது உங்க வீட்டு வேலைக்காரி வள்ளி.. அதாவது வெறும் வள்ளி.. அமிர்தவள்ளி இல்ல
அப்படி இன்ஸ்பெக்டர் சொன்னதும் சதாசிவம் தன் மனைவி வடிவுக்கரசியிடம் திரும்பினார்