30-05-2023, 10:50 AM
(28-05-2023, 07:48 AM)Vandanavishnu0007a Wrote: சட்ரென்று பார்த்தபோது அப்படிதான் தோன்றியது
ஆனால் அப்போதுதான் பிந்து தூக்கு போட்டுக்கொள்ள அவள் சித்தப்பா கொடுத்த புடவையையே மின்விசிறியில் மாட்ட போனாள்
ஆனால் அதற்குள் உஷாவும் அவள் தோழிகளும் ஓடி சென்று அவளை தடுத்து காப்பாற்றி விட்டார்கள்
ஏய் பிந்து உனக்கென்ன பைத்தியமா
இதுக்கெல்லாமா போய் சாக நினைக்கிறது
இது வெறும் பெண் பார்க்கும் படலம்தானே
சும்மா காபி மட்டும் கொண்டு போய் குடுத்துட்டு வா..
அவங்க எல்லாம் போனதுக்கு அப்புறம் உன் சித்தப்பாகிட்ட பொறுமையா பேசி கல்யாணத்துக்கு சம்மதம் இல்லைன்னு சொல்லிடலாம்
சரியா.. என்றாள் உஷா
சரிடி.. என்று அரைமனத்துடன் புடவை மாற்ற ஆரம்பித்தாள் பிந்து
காபி தட்டு டிரேயுடன் ஹாலுக்கு வந்தாள்
தலைகுனிந்தபடியே வந்தாள்
அது வெட்கத்தில் அல்ல..
வந்திருப்பவன் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்திருந்தாள்
ஒவ்வொருவராக காபி டம்பளரை எடுத்து கொண்டார்கள்
என்ன மாப்ள பொண்ணு புடிச்சி இருக்கா
ஜார்ஜ் தாமஸ் மாப்பிள்ளையை பார்த்து கேட்டார்
எங்க பொண்ணு முகத்தையே பார்க்க முடியல
தலை குனிஞ்சே இருக்காங்க.. கொஞ்சம் நிமிந்து பார்க்க சொல்லுங்க மாமா
மாப்பிளை சொல்ல
கொஞ்சம் நிமிர்ந்துதான் பாறேம்மா..
ஜார்ஜ் தாமஸ் சொன்னார்
பிந்து நிமிர்ந்து பார்த்துவாள் அதிர்ந்தாள்