Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணகி பரம்பரை
#34
(15-05-2023, 02:50 PM)Vandanavishnu0007a Wrote: அச்சச்சோ.. அப்படியாங்க.. ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. அவளுக்கா அப்படி ஒரு துர்பாக்கியம் 

வெளியேதான் வாயால் அப்படி சொல்லி வடிவு வருத்தப்பட்டாளே தவிர.. 

உள்ளுக்குள்.. சாவட்டும் சாவட்டும் அந்த தேவடியா முண்ட.. எப்போ பாரு என் புருஷன் கூட காலங்காத்தால ஜாக்கிங் போறேன்னு கூத்தடிக்கிறது 

என் கண்ணு முன்னாடியே டெயிலி வந்து இவரை வண்டில ஏத்திட்டு போறதும் இறக்கி உடுறதுமா இருந்தாள்ல.. 

சக்காளத்தி.. சக்காளத்தி.. என்று அந்த வயதிலும் பொறாமையில் உள்ளுக்குள் கருவினாள் வடிவு 

புருஷனை பாரினுக்கு அனுப்பிட்டு இங்க எத்தனை கள்ள புருஷன் வச்சி இருந்தாளோ.. 

எவனோ ஒரு கள்ளப்புருஷன் பொறாமை பட்டுதான் அவளை கொன்னு இருப்பான் 

இல்ல பாரின்ல இருக்க அவ புருஷனே கூட இவ விஷத்தை கேள்வி பட்டு ஆன்லைன் மூலமா கூலிப்படை வச்சி கூட அவளை போட்டு தள்ளி இருப்பான் 

நல்லவேளை இனிமே என் புருஷன் தப்பிச்சான்.. 

ஒரு வார்த்தை வருத்தமாக வெளியே சொல்லிவிட்டு ஓராயிரம் வசவு வார்த்தைகளை மனதுக்குள் அமிர்தவள்ளியை திட்டியும் சபித்தும் சொல்லிக்கொண்டாள் வடிவுக்கரசி

டொக் டொக் டொக் என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது 

வடிவுக்கரசி சென்று வாசல் கதவை திறந்தாள் 

வெளியே போலீஸ் நின்று இருந்தது 

காக்கி உடையை பார்க்கவும் பயந்து விட்டாள் வடிவுக்கரசி 

என்னங்க.. என்னங்க.. நம்ம வீட்டுக்கு போலீஸ் வந்து இருக்குங்க

உள்ளே ஓடி போய் பதட்டத்துடன் சதாசிவத்திடம் சொன்னாள் 

அமிர்தவல்லி செத்துட்டாள்ல.. அது விஷயமா என்கொயரிக்கு ஏதும் வந்து இருப்பாங்க நீ பயப்படாத நான் போய் பார்க்குறேன்..

வடிவுக்கு தைரியம் கொடுத்தபடியே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தார் 

வாங்க உள்ள வாங்க சார் 

இன்ஸ்பெக்டரும் சில கான்ஸ்டபிள்களும் சதாசிவம் வீட்டுக்குள் பூட்ஸ் காலுடன் தபதபவென்று நுழைந்தார்கள்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: கண்ணகி பரம்பரை - by Vandanavishnu0007a - 25-05-2023, 01:55 PM



Users browsing this thread: 3 Guest(s)