22-05-2023, 06:03 PM
(18-05-2023, 07:23 PM)Vandanavishnu0007a Wrote: இங்கே நடப்பது.. தான் காண்பது எல்லாம் கனவா நினைவா என்று ஒரு பக்கம் குழம்பி போனார் சாய்குமார்
தன்னையே கிள்ளி பார்த்தார்
ஆஆ.. வலியெடுத்தது
ஆனால் ஆனால் நான் எப்படி இப்படி எழுந்தும் உக்காந்து இருக்கிறேன்.. படுத்தும் இருக்கிறேன்
அவருக்கு ஒன்றுமே புரியவில்லை
மெல்ல அந்த பொண பெஞ்சை விட்டு எழுந்தார்
ஆனால் இன்னொரு உருவம் கண்களை மூடி பொணமாகவே படுத்து இருந்தது
இவர் எழுந்தபோது உடல் ரொம்ப லேசாக ஈசியாக வெயிட்டே இல்லாதது போல இருந்தது
ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமாக இருந்தது
அப்படியே மெல்ல பவித்ராவின் படுக்கை அறை நோக்கி நடந்தார்
நடக்கும் போது கூட உடல் எடை இன்றி தானாக காற்று நகர்வது போல இருந்தது
பவித்ராவின் படுக்கை அறைக்கு முன்பாக வந்து நின்றார்
பெட் ரூம் கதவு சாத்தி இருந்தது
காலிங் பெல் விஷயம் சாய்குமாருக்கும் தெரியும்
கதவின் நிலைக்கு மேல் சைடில் இருந்த காலிங் பெல் பட்டன் மேல் கை வைத்தார்
அட என்ன ஒரு ஆச்சரியம்
தன் விரல் பொசுக் என்று காலிங் பெல்லின் பட்டனை ஊடுருவி உள்ளே போனது
ஐயோ.. விரல் உள்ளே மாட்டி ஷாக் அடித்து செத்து கித்து தொலைஞ்சிட போறோம் என்று பயந்து சட்ரென்று கையை வெடுக்கென்று இழுந்து கொண்டார்
மீண்டும் காலிங் பெல்லின் மேல் கைவைத்தார்
இந்த முறையும் விரல் பெல் பட்டன் உள்ளே சென்றதே தவிர பெல் பட்டன் மேல் அழுந்தவில்லை