18-05-2023, 07:23 PM
(17-05-2023, 04:52 PM)Vandanavishnu0007a Wrote: சாய்குமார் கோபமாக எழுந்து அமர்ந்தார்
கழுத்தில் போட்டு இருந்த சாவு மாலையை வேகமாக கழட்டி வீசினார்
இங்க என்ன எழவா விழுந்துடுச்சி.. என்ன சுத்தி உக்காந்து ஒப்பாரி வைக்கிறீங்க என்று எல்லோரையும் பார்த்து கோபமாக கத்தினார்
ஆனால் யாரு அவரை கண்டுகொள்ளவில்லை
மீண்டும் மீண்டும் அவரை பார்த்து பார்த்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருந்தார்கள்
ஐயோ.. நிறுத்துங்க.. அழுறதை நிறுத்துங்க பிளீஸ் என்று தொண்டை கிழிய கத்தினார் சாய்குமார்
ஆனால் ஒருவரும் கேக்குற மூடில் இல்லை
ஏன் தன்னை யாரும் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள் என்று யோசித்தபடி திரும்பி பார்த்தார்
பக்கென்றது..
அவர் உடல் பொணமாக படுத்து இருந்தது
அப்போது.. நான் யார்.. நான்தான் எழுந்து அமர்ந்து இருக்கிறேனே..
இங்கே பொணமாக படுத்து இருப்பது யார்
குழப்பத்துக்குள் போனார் சாய்குமார்
இங்கே நடப்பது.. தான் காண்பது எல்லாம் கனவா நினைவா என்று ஒரு பக்கம் குழம்பி போனார் சாய்குமார்
தன்னையே கிள்ளி பார்த்தார்
ஆஆ.. வலியெடுத்தது
ஆனால் ஆனால் நான் எப்படி இப்படி எழுந்தும் உக்காந்து இருக்கிறேன்.. படுத்தும் இருக்கிறேன்
அவருக்கு ஒன்றுமே புரியவில்லை
மெல்ல அந்த பொண பெஞ்சை விட்டு எழுந்தார்
ஆனால் இன்னொரு உருவம் கண்களை மூடி பொணமாகவே படுத்து இருந்தது
இவர் எழுந்தபோது உடல் ரொம்ப லேசாக ஈசியாக வெயிட்டே இல்லாதது போல இருந்தது
ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமாக இருந்தது
அப்படியே மெல்ல பவித்ராவின் படுக்கை அறை நோக்கி நடந்தார்