18-05-2023, 02:26 PM
(16-05-2023, 11:06 AM)Vandanavishnu0007a Wrote: எனக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது
எங்கே டிக்கியை திறந்து பார்த்துவிட்டால் நான் மாட்டிக்கொள்வேனோ என்று பயந்தேன்
ஆனால் நல்லவேளை.. கபாலி உருவம் டிக்கியை திறக்கவில்லை
கிறுக்கு முறுக்கு என்று கார் நம்பர் பிளேட் பக்கம் சத்தம் கேட்டது
கபாலி நம்பர் பிளேட் மாத்துகிறான் என்று தெரிந்து கொண்டேன்
அந்த கிறுக்கு முறுக்கு சத்தம் கொஞ்சம் நேரத்தில் நின்று நிசப்த்தமாக இருந்தது
டுர்ர்ர்ர் என்று கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது
ஒரு சின்ன குலுங்களுடன் கார் நகர துவங்கியது
சுமார் 1 மணி நேர நெடுந்தூர பயணம்
கார் ஒரு மலைப்பகுதியில் நின்றதை உணர்ந்தேன்
மெல்ல மெல்ல கபாலி நான் இருந்த காரை அந்த பெரிய மலையில் இருந்து கீழே அதாள பாதாளத்துக்கு தள்ளி விட்டான்
அடப்பாவிங்களா.. இதைதான் அந்த பாஸ் பயல் நம்பர் பிளேட் மாத்திட்டு டிஸ்போஸ் பண்ணு என்று சொன்னானா என்று யோசித்து கொண்டே அந்த காருடன் சேர்ந்து டிக்கிக்குள் நானும் உருண்டு அந்த அதால பாதாள பள்ளத்தில் விழுந்தேன்
டம்மு டும்மு என்று வெளியே பயங்கர சத்தம் கேட்டது
ஆனால் உள்ளே இருந்த எனக்கு ஏதும் அடி படவில்லை
ஏதோ பஞ்சு மெத்தையில் புரண்டு உருண்டு படுப்பது போலத்தான் இருந்தது
அதுவும் ஒருவகையில் உண்மைதான்
கார் டிக்கிக்குள் ஒரு இலவம்பஞ்சு படுக்கை மெத்தையை சுருட்டி வைத்து இருந்தார்கள்
நல்லவேளை டிக்கியில் இருந்து சரக்கை எடுக்கும்போது அந்த பஞ்சு மெத்தை படுக்கையை எடுக்க அவர்கள் மறந்து விட்டார்கள்
நான் முரட்டு ரவுடி வந்தனா அம்மாவிடம் இருந்து தப்பி வந்து கார் டிக்கியில் ஏறி ஒளிந்து கொண்டபோது அப்போது அதை கவனிக்கவில்லை
ஆனால் இப்போதுதான் தெரிந்தது நான் அந்த டிக்கியில் இருந்த பஞ்சு படுக்கையில்தான் ஏறி படுத்து இருந்தேன் என்று
அதனால்தான் எனக்கு எதுவும் ஆகவில்லை