18-05-2023, 11:03 AM
(12-05-2023, 02:32 PM)Vandanavishnu0007a Wrote: ஆனந்தும் வித்யாவும் கட்டி பிடித்த காட்சி வக்கீல் மூர்த்திக்கு கொஞ்சம் திருப்தியை தந்தது
உங்கள ஜோடியா பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு..
ஆனா இன்னும் ஒரு வாரம் உங்க வீட்ல நான் தங்கி இருந்து நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒற்றுமையா சண்டை சச்சரவு இல்லாம குடும்பம் நடத்துறீங்கன்னு பார்த்துட்டுதான் சொத்து பணத்தை உங்ககிட்ட ஒப்படைப்பேன்
ஐயோ என்னங்க 2 நாள்ன்னு சொன்னிங்க.. வக்கீல் ஒரு வாரம்ன்னு குண்டை தூக்கி போடுறாரு..
வித்யா தன் புருஷன் வினோத்தை பார்த்து அதிர்ச்சியாக கேட்டாள்
ஆனால் ஆனந்தும் வித்யாவும் கட்டி அணைத்தபடியே நின்றிருந்தார்கள்
அதை மூர்த்தி கவனித்து விட்டார்
அதென்னம்மா மலர்.. எது கேக்கனும்னாலும் உன் பக்கத்து போர்ஷன் வினோத்கிட்டயே கேக்குற
இவ்ளோ பக்கத்துல உன்னை கட்டி புடிச்சிட்டு நிக்கிற உன் புருஷன் ஆனந்த்கிட்ட கேக்க மாட்டியா
இல்ல வக்கீல் சார்.. நான் என் புருஷன் ஆனந்த்கிட்டதான் கேட்டேன்
ஆனா என் கழுத்து சுளிக்கிக்கிச்சு.. அதனாலதான் என் தலை திரும்பி எதார்த்தமா பக்கத்து போர்ஷன் வினோத்தை பார்க்க வேண்டியதா ஆயிடுச்சி..
எப்படியோ வித்யா மூர்த்தியிடம் அப்படி சொல்லி சமாளித்தாள்
நல்லவேளை சமீபத்தில் சுந்தர் சி டைரக்ட் பண்ண மசாலா கபே (கலகலப்பு 1) திரைப்படம் பார்த்ததில் இந்த கழுத்து சுளுக்கு ஐடியா வித்யாவுக்கு உதித்தது
அதில் அமிதாப் மாமாவாக வரும் இளவரசுவுக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட்டும் படம் முழுவதும் கழுத்து ஒரு பக்கம் திரும்பியே இருக்கும்
அந்த டெக்னீக்கைதான் இப்போது வித்யா மூர்த்தியிடம் உபயோகித்து சமாளித்தாள்
ஆனந்த் அண்ணாவை கட்டி பிடித்து இருந்தாலும் கழுத்தை தன் புருஷன் வினோத் பக்கம் திரும்பியே வைத்து இருந்தாள்
அப்போதான் வக்கீல் மூர்த்தி கடைசிவரை ஆனந்த் அண்ணனையும் தன்னையும் புருஷன் பொண்டாட்டி என்று நம்புவார் என்று நினைத்து கொண்டாள்
புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து இருக்குற உங்க கல்யாண போட்டோ ஒன்னு குடுங்க..
ரிஜிஸ்டர் பாத்திரத்துல ஒட்டி அதுல சொத்து பாத்திரம் எழுதணும் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார் மூர்த்தி
ஐயோ.. என்னடா வினோத்.. இப்போ என்ன பண்றது.. என்ற ஆனந்த் வினோத்தை பார்த்தான்
இரு இரு கவலை படாத.. அதை நான் பார்த்துக்கிறேன்.. என்று வினோத் ஆனந்துக்கு சிக்னல் கொடுத்தான்
ஆனந்த் இப்போது கொஞ்சம் நிம்மதியானான்