10-05-2023, 07:27 PM
(09-05-2023, 10:05 AM)Vandanavishnu0007a Wrote: சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே வந்து இளம் சூடு போய் சுட்டெரிக்க ஆரம்பித்தது
சதாசிவத்தால் ரொம்ப பொறுமையாக காத்து கொண்டு இருக்க முடியவில்லை
மெல்ல எழுந்தார்
அந்த பார்க்கின் மறுபுறத்தை நோக்கி மெல்ல நக்க ஆரம்பித்த்தார்
ஒரு கார்னரில் பார்க்கிற்கு வந்தவர்கள் மொத்த கூட்டமும் நின்று கொண்டு இருந்தார்கள்
ஏதோ அசம்பாவிதம் நடந்தது போல சதாசிவத்துக்கு தோன்றியது
தன் நடையின் வேகத்தை கூட்டினார்
ஓட்டமும் நடையுமாக அந்த கூட்டத்தை நோக்கி போனார்
கூட்டத்தை நெருங்கி விளக்கி உள்ளே எட்டி பார்த்தார்
அமிர்த வள்ளியின் உடல் ஆம்புலன்ஸ் ஸ்டெச்சரில் படுக்கவைத்து அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு இருந்தார்கள்
அமிர்தா.. அமிர்தா.. என்று கத்திகொண்டே ஆம்புலன்ஸ் பின்னாடி ஓடினார்
ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் பிராதன சாலைக்குள் நுழைந்து வெகுவேகமாக பறந்தது
சதாசிவம் சோர்வாக வீடு திரும்பினார்
என்னங்க.. என்ன ஆச்சி.. எப்போதும் வாக்கிங் போய்ட்டுவந்து ரொம்ப உற்சாகமா இருப்பீங்க
இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கீங்க
அவர் மனைவி வடிவுக்கரசி காப்பி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே சதாசிவத்தை விசாரித்தாள்
அவள் பெயருக்கேற்ப அவள் முகமும் உடம்பும் நடிகை வடிவுகரசி போலவேதான் இருந்தாள்
அமிர்தவல்லி தெரியுமில்ல.
ம்ம்.. ஆமாம்.. உங்க கூட டெய்லி ஜாக்கிங் வருவாளே..
உங்களை கூட தினமும் வீட்ல வந்து டிராப் பண்ணிட்டு போவாளே.. அந்த பொண்ணையா கேக்குறீங்க..
ஏன் அவளுக்கு என்ன ஆச்சி???
அமிர்தவள்ளி செத்துட்டா..
அமைதியாக சொன்னார் சதாசிவம்