26-04-2023, 12:54 PM
ஒவ்வொருவராக எம்.டி. ரூமுக்குள் சென்று சென்று வந்தார்கள்..
சிலர் முகத்தில் மகிழ்ச்சி.. எப்படியும் இந்த இன்டெர்வியூவில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மகிழ்ச்சியும் மமதையும் இருந்தது..
சிலர் முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தார்கள்..
அவர்கள் முகத்தை வைத்தே இவர்கள் இன்டெர்வியூவில் ஊத்திக்கொள்வார்கள் என்று நன்றாக தெரிந்தது..
மிஸ்டர் சுமன் மீசை முருகேசன்..
மிஸ்டர் சுமன் மீசை முருகேசன்..
மிஸ்டர் சுமன் மீசை முருகேசன்..
சுமனின் பெயர் 3 முறை அழைக்கப்பட்டது..
சுமன் எழுந்து எம்.டி. ரூமுக்கு சென்றான்..
உள்ள வரலாமா சார்.. என்று அனுமதி கேட்டான்..
உள்ள வாப்பா.. என்று எம்.டி. அன்பாக அழைத்தார்
எம்.டி.யை பார்க்க அப்படியே அச்சு அசல் தில்லுமுல்லு தேங்காய் ஸ்ரீநிவாசன் மாதிரியே இருந்தார்
உன் பேரெண்ணப்பா.. என்று கேட்டார் தேங்காய் ஸ்ரீநிவாசன்