16-04-2023, 10:08 AM
நான் ஓடி சென்று காரில் ஏறிக்கொண்டேன்..
விஜயகாந்தோடு ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறோம்.. என்று ஒரே எண்ணமும் மகிழ்ச்சியும் மட்டும்தான் என் மனதில் இருந்தது..
அதனால்தான் அப்படி ஒரு துள்ளலும் ஓட்டமுமாய் காரில் சென்று ஏறினேன்
கார் நேராக பி ஆர் ஓ பன்னீர் செல்வம் அவுட் ஹவுஸ் பங்களாவின் போர்டிகோவில் சென்று நின்றது..
நீங்க போங்கம்மா.. என்று கார் டிரைவர் என்னை இறக்கிவிட்டு விட்டு அவர் கார் எடுத்து கார் ஷெட்டி விட சென்று விட்டார்
நான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன்..
உண்மையிலேயே அசந்து போனேன்..
எவ்ளோ பெரிய பங்களா..
வசந்த மாளிகையில் வாணிஸ்ரீக்கு சிவாஜி கட்டி வைத்த வசந்த மாளிகை போல இருந்தது அந்த அவுட் ஹவுஸ் பங்களா..
ஒரு சாதாரண பி ஆர் ஓ.வுக்கே இவ்ளோ பெரிய பங்களா இருக்கிறது என்றால்.. நாம் பெரிய நடிகையாகி இதைவிட எவ்ளோ பெரிய பங்களா காட்டுவோம்.. என்ற கனவில் அந்த பங்களாவின் உள்ளே காலடி எடுத்து வைத்தேன்..