15-04-2023, 09:40 PM
(15-04-2023, 09:21 PM)Gunman19000 Wrote: வணக்கம் அன்பர்களே!
நான் இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். முழுவதுமாக முடிக்கவில்லை..... தொடரவும் இல்லை. பாதியில் தொக்கி நிற்கிறது.
எனக்கு பெரும்பாலும் நேரமும் தனிமையும் கிடைப்பதில்லை. கோடை விடுமுறைக்கு மனைவி பிள்ளைகள் அவளின் தந்தை ஊருக்கு சென்றால் மட்டுமே தனிமையும் நேரமும் கிடைக்கிறது.
நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன் நான் எழுதும் கதைகளுக்கு எப்பொழுதும் வாசகர்களின் விமர்சனங்களை எதிர்பார்ப்பது கிடையாது.
ஆனால் அதே நேரத்தில் வாசகர்கள் சிலர் தரும் விமர்சனங்கள் எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்து விடும்.
எதிர்மறையான விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்து மீண்டும் சரியான பாதையில் கதையை எழுத வைத்து விடும்.
இங்கு ஒருவர் சொல்வது போல கம்யூனிட்டி கைடு லைன்ஸ் இல்லாதிருப்பதால் விமர்சனங்கள் நிச்சயமாக எழுத்தாளர்களுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மீண்டும் மீண்டும் நாம் கதைகளை படித்து மகிழ வேண்டும் என்றால் நிச்சயமாக விமர்சனங்கள்
அதை நமக்கு அள்ளித் தரும்.
நன்றி வணக்கம்
அருமையான பதிவு நண்பா
நன்றி