14-04-2023, 10:50 AM
அந்த கதவின் தாழ்பாள் வெளிப்பக்கம் தாள் இடப்பட்டு இருந்தால் மொட்டைமாடிக்கு யாரும் போய் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கலாம்..
ஆனால் இப்போது தாழ்பாள் உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது..
அப்படியென்றால் கண்டிப்பாக மொட்டைமாடியில் யாரோ இருக்கிறார்கள்.. என்று வினோத் முடிவு பண்ணான்..
மெல்ல சத்தம் வராமல் தாழ்ப்பாளை விளக்கினான்..
கொஞ்சம் கூட சத்தம் வராதலவுக்கு அந்த கிரில் கேட்டையும் திறந்தான்..
மொட்டைமாடிக்கு மெல்ல அடிமேல் அடி அடுத்து வைத்து நடந்தான்..
பால் நிலவு வெளிச்சம்.. அப்படியே பகலை போல பளிச்சென்று வெளிச்சமாக இருந்தது மொட்டைமாடி..
ஆனால் அங்கும் யாரும் இல்லை..
சரி கீழே வேற அறைகளில் தேடி பார்க்கலாம் என்று நினைத்து மொட்டைமாடி விட்டு கீழ படிக்கட்டு இறங்க போனான்..
டேய் ஆனந்த் மெல்லடா.. என்று மொட்டை மாடியில் இருந்து கிசுகிசு என்று சிணுங்கலாய் ஒரு குரல் கேட்டது