31-03-2023, 07:11 PM
டாக்டர் ஓலா புக் பண்ணி அவசர அவசரமாக கோபால் வீட்டுக்கு வந்தார்
சாய்குமார் நடு கூடத்தில் பெஞ்சில் படுக்கவைக்கப்பட்டு இருந்தான்
தலைமாட்டில் ஊத்துப்பத்தி கொளுத்தி வைக்கப்பட்டு இருந்தது..
ஐயோ.. நான் வந்து பார்க்குறதுக்குள்ள சாய்குமார் செத்துட்டாரா.. டாக்டர் பதறினார்..
இன்னும் சாகல டாக்டர்.. எப்படியும் நீங்க வந்து சாய்குமார் கையை பிடிச்சி பல்ஸ் பார்த்ததும் சாகுற மாதிரிதான் ஸீன்.. அதனாலதான் முன்னேற்பாடா பாடிய நடுக்கூடத்துல பெஞ்சில படுக்கவச்சி தலைமாட்டுல ஊத்துப்பதி எல்லாம் ரெடி பண்ணி வச்சி இருக்கோம்..
விளக்கம் அளித்தார் கோபால் தாத்தா
சொந்தக்காரங்களுக்குக்கூட சொல்லிட்டேன் டாக்டர்.. இப்போ நீங்க சாய்குமார் பல்ஸ் பார்த்து ரிசல்ட் சொல்லவேண்டியது மட்டும்தான் பாக்கி
டாக்டர் சாய்குமார் கைகளை பிடித்து பல்ஸ் பார்த்தார்..
தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டினார்..
முகத்தை சோகமாக வைத்துக்கொண்டார்
ஐ யம் சாரி மிஸ்டர் கோபால்.. உங்க மாப்பிள்ளை.. செத்துட்டார்..