28-03-2023, 01:24 AM
பஸ் கோவா நெருங்க நெருங்க குளிந்த காற்று அடிக்க ஆரம்பித்தது..
மரியாவுக்கு கொஞ்சம் அசதியாக இருந்ததால் அப்படியே வினோத் தோள்களின் மீது சாய்ந்து படுத்து கன்யார்ந்து இருந்தாள்
வினோத்துக்கு தூக்கமே வரவில்லை..
யாரை தேடி அவன் சென்றுகொண்டு இருந்தானோ.. அந்த மரியா இப்போது தானாக அவனுக்கு கிடைத்து இருக்கிறாள்
மரியாவை வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் செலவு பண்ண தயாராய் இருந்தான்..
அதற்காகதான் அந்த குஞ்சுட்டி ப்ரோக்கருக்குகூட லட்சக்கணக்கில் உடனே பணத்தை வாரி இறைத்தான்
ச்சே.. அந்த ப்ரோக்கருக்கு அவ்ளோ பணம் கொடுத்து இருக்கக்கூடாதோ என்று இப்போது நினைத்தான்..
சரி சரி பணம் போகட்டும்.. அதான் மரியா இப்போது தனக்கு கிடைத்து விட்டாளே என்று சந்தோஷப்பட்டான்
அந்த ப்ரோக்கரை அணுகி இருக்காவிட்டால்.. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மரியா தனக்கு கிடைத்து இருக்க மாட்டாள் என்பதையும் நினைத்துக்கொண்டான்..
அதிகாலை சுமார் 3 மணி இருக்கும்.. அவர்கள் பஸ்ஸை மீண்டும் அந்த வெள்ளை கார் ஒட்டியது போல ஓவர் டேக் பண்ணியதை ஜன்னல் வழியாக பார்த்தான் வினோத்