23-03-2023, 06:18 PM
சரி வாசு காரை பார்க் பண்ணிட்டு நீயும் சாப்பிட வா.. நாங்க உள்ள போய் சாப்டுட்டு வரோம்..
அந்த பெண் பின் பக்கம் திரும்பினாள்..
பின் பக்க சீட்டில் இன்னும் 2 பெண்களும்.. 3 ஸ்கூல் பசங்களும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்கள்..
தூக்கக்கலகத்துடன் அந்த கும்பல் ஹோட்டலுக்குள் நுழைந்தது..
அவர்கள் பேசிக்கொண்டதில்.. அந்த 3 ஸ்கூல் பையன்களும் மகன்கள் என்றும்.. அந்த 3 பெண்களும்.. அவர்கள் அம்மாக்கள் என்றும் ஏதோ உல்லாச டூர் போகிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது..
மரியாவும் வினோத்தும் அதுவரை விளக்கமாக தெரிந்தது..
டிரைவர் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு அவனும் ஹோட்டலுக்குள் சாப்பிட போனான்..
அந்த 6 பேரும் ஏசி ரூமுக்குள் சென்று அமர்ந்தனர்..
அவர்களுக்கு கார் ஓட்டிவந்த டிரைவர் வெளியே பொதுவான மேஜையில் உக்காந்து சாப்பிட ஆரம்பித்தான்
இந்த காட்சிகளை எல்லாம் மரியாவும் வினோத்தும் பஸ்சில் அமர்ந்தபடியே பஸ் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..
அவர்கள் பஸ்ஸின் டிரைவரும் கண்டக்டரும் சாப்பிட்டுவிட்டு வர.. பஸ் மீண்டும் கோவா நோக்கி புறப்பட்டது..