17-03-2023, 08:25 AM
(15-03-2023, 08:30 AM)utchamdeva Wrote: எனக்கும் அதே நிலைமைதான் இருந்தாலும் சின்ன சின்ன இடைவெளியில் சுருக்கமா எழுதி வைத்துக்கொண்டு விடுமுறையில் எல்லா வரிகளையும் சரி பார்த்து லென்த்ஆஹ் எழுதி போஸ்ட் செய்கிறேன்...
நீங்களும் அதை செய்தால் நன்று... இல்லைஎன்றால் கடுப்பாகி வேறு கதைக்கு செல்ல நிறைய வாய்ப்பு...
என்னாலேயே பாதி கதைக்குமேல் படிக்கவே ஆர்வம் போய்விட்டது... இதில் கதையின் பாகம் எத்தனை என்று கூட தெரியவில்லை ?
நீங்கள் கூறி இருக்கும் ஐடியா சூப்பர் ஓ சூப்பர் நண்பா
ஆனால் நான் தினமும் எழுதும் 10 வரிகளை அப்டேட் பண்ண அடுத்த செக்கெண்டே டெலீட் பண்ணிவிடுவேன் நண்பா
பேக் அப் எடுக்கும் பழக்கமில்லை எனக்கு
அதனால் நீங்கள் சொல்வது போல நாள் உக்காந்து சேவ் பண்ணி சேவ் பண்ணி கதை எழுதுவதற்கு எனக்கு போதிய வசதியும் நேரமும் இல்லை நண்பா
இப்படி சேவ் பண்ணாத காரணத்தால் எனக்கு சீக்கிரம் தாடி பாலாஜி வளர்ந்து விடுகிறது
அதனால்தான் அன்றன்றைய பதிவை அன்றண்டைக்கே பதிவிட்டு விடுகிறேன்
படிப்பவர்கள் வேண்டுமானால் 10 நாளைக்கு ஒரு முறை என் கதையை படித்து இன்புறலாம்
தினமும் கிடைக்கும் வியூஸ்தான் என்னை தேவை இல்லாமல் தொடர்ந்து இந்த மாதிரி நிறைய கதை எழுதி உங்களை எல்லாம் தொந்தரவு பண்ண வைக்கிறது நண்பா
நீங்கள் அனைவரும் ஒன்று கூடி என் கதைகளை கிளிக் செய்யாமல்.. உள்ளே சென்று பார்க்காமல்.. வியூஸ் ரேட் ஏத்தாமல்.. இருந்தால் கண்டிப்பாக நான் திருந்த வாய்ப்பு உண்டு நண்பா
கதை எழுதுவதையும் நிறுத்திக்கொள்ள சான்ஸ் இருக்கிறது
வியூஸ் சரியாக வந்து கொண்டு இருப்பதால்தான் திமிரெடுத்து குட்டி குட்டி பதிவுகளை போடவேண்டிய துர்பாக்கிய நிலை எனக்கு
என் கொட்டத்தை அடக்க ஏதாவது நல்வழி பிறக்காதா என்று நானும் ஏங்கி கொண்டுதான் இருக்கிறேன் நண்பா
எனக்காக பலர் தனி திரி போட்டு ஒன்று கூடி மாறி மாறி உமிழ்ந்து பார்த்தார்கள்
அந்த திரியின் வியூஸ் விட நான் எழுதும் கதைகள் திரி வியூஸ்தான் அதிகமாக உள்ளது நண்பா
என்ன செய்வது என்றே தெரியவில்லை நண்பா
நாயகன் பட டயலாக் மாதிரி.. வியூஸ்ச நிறுத்த சொல்லுங்க.. நான் கதை எழுதுறத நிறுத்துறேன்.. என்று சொல்லும் பரிதாப நிலைக்கு நான் ஆளாகி விட்டேன் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா