16-03-2023, 02:30 PM
ஓகே அவனை விடு.. நீ லாட்ஜ்ல புக் பண்ண தேதி 31ம்ன்னு சொல்ற.. அப்படித்தானே..
ஆமாம் வந்தனா மேடம்..
யுவர் ஆனார்.. அந்த லாட்ஜ் மேனேஜரை நான் விசாரிக்க விரும்புகிறேன்..
எஸ் ப்ரொசீட்
லாட்ஜ் மேனேஜர்.. லாட்ஜ் மேனேஜர்.. லாட்ஜ் மேனேஜர்.. டவாலி கூவினான்
ஆண்டிபட்டி லாட்ஜ் மேனேஜர் கோர்ட்டுக்குள் வந்து சாட்சி கூண்டில் ஏறி நின்றார்
மிஸ்டர் லாட்ஜ் மேனேஜர்.. இந்த கல்லூரி மாணவன் மதிவாணனை உங்களுக்கு தெரியுமா..
தெரியும் மேடம்.. 31ம் நைட்டு எங்க லாட்ஜ்ல ரூம் புக் பண்ணான் மேடம்
ரூம் புக் பண்ண உங்க லாட்ஜ் லெட்ஜரை நான் பார்க்கலாமா?
இப்படி நீங்க கேட்பீங்கன்னு தெரிஞ்சிதான் கையோட கொண்டு வந்து இருக்கேன் வக்கீல் மேடம்.. இதோ எங்க லாட்ஜ் ஹோட்டல் ரிஜிஸ்டர் லெட்ஜர்..