14-03-2023, 11:11 PM
கண்களை லேசாய் திறந்து பார்த்தவள் பார்வைக்கு அந்த இதய ஓவியம் கண்ணில் பட்டது..
ஆ.. என்று வலியில் துடிப்பது போல ஆனந்த் கத்தினான்
ஐயோ.. என்ன மானிடா ஆச்சி.. ??
அவள் பதறினாள்
என் இதயம் வலிக்கிறது..
உன் இதயம் வலிக்கும்படி நான் என்ன செய்தேன் மானிடா???
என் இதயத்தைதான் உன் கால்விரல்களால் தீட்டிக்கொண்டு இருக்கிறாயே..
உன் பூ பாதம் பட்டு என் நெஞ்சு வலிக்கிறது பொன்னி..
ஐயோ.. சீச்சீ.. போங்கள்.. என்று வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு ஓட போனாள்
ஆனந்த் பாய்ந்து சென்று அவள் கையை பிடித்துக்கொண்டான்..
வேண்டாம் விடு மானிடா.. யாராவது பார்த்துவிட்டால் நமக்கு ஆபத்தாகிவிடும்..