14-03-2023, 04:07 PM
உங்க முன்னாடி வாழ்க்கை எப்படி இருந்துச்சின்னுறது பத்தி எனக்கு கவலை இல்ல மரியா..
இனிமே.. உங்க கடைசி காலம் வரை உங்க கூட நான் வாழணும்னு ஆசைப்படுறேன்..
உங்க சொந்தக்காரங்களோ.. இல்லை என்னோட சொந்தக்காரங்களோ.. யார் கண்லயும் படாம நம்ம வேற ஒரு ஊருக்கு போய் புதுசா ஒரு வாழ்க்கை துவங்கலாம் மரியா.. என்ன சொல்றீங்க..
எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் குடுக்க முடியுமா வினோத்..
கண்டிப்பா டைம் குடுக்குறேன் மரியா.. ஆனா இந்த இடத்துக்கு அடுத்த பஸ் வர்ற வரைக்கும்தான்..
ம்ம்.. சரி வினோத்..
இங்க நடுரோட்டுல நிக்கவேண்டாம்.. வாங்க அந்த சிற்றுண்டி ஹோட்டல் உள்ள போய் உக்கரலாம்..
இருவரும் அந்த சிற்றுண்டி கட்டடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்..
பாம்.. பாம்.. பாம்.. பாம்.. என்று பஸ் ஹாரன் சத்தம் கேட்டது..
மூணார் டு கோவா.. என்ற பெயர் பலகையுடன் அந்த பஸ் அவர்கள் நோக்கி வந்து கொண்டு இருந்தது.