14-03-2023, 08:04 AM
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு திரைப்படவுலகத்தில் நுழைந்தவர் அருந்ததி.
சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது தகப்பனார் ஒரு நாடக நடிகர். அதனால் இவருக்கும் நடிப்பின் மீது ஏற்பட்டது. ஆதலால் சென்னை, அடையாறு திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றார்.
ஒரு நாள் இவரை அழைத்து ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் ஒரு சிறு வேடமிருக்கிறது என்று சொல்லி நடிக்க சம்மதா என்று கேட்டிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
இவரும் சம்மதித்து அவ்வேடத்தில் நடித்தார். தண்ணீர் தண்ணீர் படமும் வெளிவந்தது.எல்லோராலும் பாராட்டப்பட்டார். அதனால் அப்படத்திற்குப் பின்னர் இவரை ரசிகர்கள் எங்கு கண்டாலும் தண்ணீர் தண்ணீர் என அழைத்து வந்தனர்.
ஆனால் அதைத் தொடர்ந்து வெளிவந்த எல்லாப் படங்களிலும் இவருக்கு அளிக்கப்பட்டவை அனைத்தும் துணைக் கதாபாத்திரங்கள்தான்.
உயர்ந்த உறவுகள் என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். அப்படத்தின் கதாநாயகன் சரத்பாபு. இலங்கையில் இதன் படப்பிடிப்பு நடந்தபோதுதான் அங்கு கலவரம் தொடங்கியது. அதனால் படப்பிடிப்பிற்குச் சென்றவர்கள் அனைவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என வந்து சேர்ந்தனர்.
தொடர்ந்து ‘தராசு’, ‘மன்மத ராஜாக்கள்’, ‘ருசி’, ‘மலர்கள் நனைகின்றன’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’, தூரல் நின்னு போச்சு, புத்திசாலி பைத்தியங்கள் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் இவர் நடித்தார்.
இவர் நடித்த மேலும் சில படங்கள்:
தண்ணீர் தண்ணீர் [1981]
தராசு [1984]
நிரபராதி [1984]
புதியவன் [1984]
லட்சுமி வந்தாச்சு [1986]
மாட்டுக்கார மன்னாரு [1986]