10-03-2023, 07:22 PM
30ம் தேதி அல்லது 31ம் தேதி எங்க அண்ணி லட்சுமி துணிகளை நீங்க துவைசீங்களா.. ???
ம்ம்.. 30ம் தேதி நைட்டு கொல்லைப்புறத்துல வச்சி துவைச்சிட்டு இருந்தேன் வக்கீல் மேடம்
அப்போ அந்த கொல்லைப்பக்கமா யாராவது வந்தார்களா.???
அப்படி யாரும் வரலே மேடம்..
மைனா.. கொஞ்சம் நல்லா யோசிச்சி சொல்லு.. இது என்னோட அண்ணி லட்சுமியோட வாழ்க்கை பிரச்சனை
இருங்க மேடம் கொஞ்சம் யோசிச்சி சொல்றேன்..
டிக் டிக் டிக் டிக்..
கோர்ட்டில் இருந்த கடிகாரத்தில் நேரம் ஓடிக்கொண்டே இருந்தது..
ம்ம்.. இப்போ நியாபகம் வந்துடுச்சி மேடம்..
அதோ உங்க எதிர்ல உக்காந்து இருக்காரே.. அந்த வக்கீல் அங்கிள்.. அவர் அன்னைக்கு நைட்டு நான் துவைச்சிட்டு இருந்த கொல்லைப்பக்கமா வந்தாரு மேடம்..