09-03-2023, 07:08 PM
வினோத்தான் உணர்ச்சி வசப்பட்டு படபடவென்று பேச பேசிக்கொண்டே இருந்தான்
ஆனால் அவள் நிதானமாக பேச ஆரம்பித்தாள்
பஸ்ல ரவுடிங்க என்னை தேடி வந்தப்போ.. அவங்ககிட்ட இருந்து என்னை காப்பாத்துனீங்க..
நான் பஸ் மிஸ் பண்ணப்பவும் எனக்காக உங்க பயணத்தையும் நிறுத்தி எனக்காக என்னோட பேக்கோட இந்த இடத்துலயே இறங்கிட்டிங்க..
இந்த உதவிகளுக்கு எல்லாம் எப்படி நான் கைம்மாறு பண்ண போறென்னே தெரியிலாயங்க.. என்றாள் மரியா
ஐயோ கைம்மாறு எல்லாம் வேண்டாம் மரியா..
நீங்க எப்போவும் என் கூடவே இருந்தா மட்டும் போதும்..
வேற ஒண்ணுமே உங்ககிட்ட இருந்து நான் எதிர் பார்க்கல..
உங்களோட கடந்த காலத்தை பத்தியோ.. உங்களை பத்தியோ நான் எதையும் கேக்க மாட்டேன்..
ப்ரெஷ்ஷா உங்களோட ஒரு வாழ்க்கையை துவங்கனும்னு நினைக்கிறேன் மரியா.. பிளீஸ்.. உங்ககிட்ட இருந்து பாசிட்டிவ்வான பதிலை எதிர் பார்க்கிறேன் மரியா.. என்று கெஞ்சும் தோரணையில் அவள் பதிலுக்காக அவள் கண்களையே பார்த்தான் வினோத்