06-03-2023, 02:42 AM
போய்த்தான் ஆகவேண்டுமா..? என்று பழைய பிளாக் அண்ட் ஒயிட் படத்தில் ஜெமினி கணேசன் எல்லாம் கேட்பது போல மிருதுவாக காதல் மொழியில் கேட்டான் ஆனந்த்
அவனுடைய அன்பான பேச்சிலும்.. ஆசையான வார்த்தையிலும் மீண்டும் மயங்கினாள் பொன்னி..
அவள் வாய்தான் போகிறேன்.. என்று சொன்னதே தவிர.. அவளுடைய அழகிய பாதம் இன்னும் நகராமல் அந்த இடத்திலேயே ஒட்டிக்கொண்டு இருந்தது..
நாணத்தில் கீழே பாறையின் மீது தன்னுடைய ஒரு கால் விரலை அழுத்தி அசைத்து அசைத்து அவள் வெட்கத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தாள்
அவள் கால் விரல் அசைவில் அவள் விரல்களில் இருந்த தண்ணீர் ஈரம் பாறையில் ஹார்ட் ஷேப்பில் ஒரு படம் போட்டுகொண்டு இருந்தது..
அதை பார்த்த ஆனந்த் அசந்து போனான்..
அடடா.. அந்த காலத்து நாணமும்.. இந்த காலத்து லேட்டஸ்ட் வாட்டர் ஆர்ட்டும் கலந்து கலக்குகிறாளே பொன்னி.. என்று ஆச்சரியப்பட்டான்..
பொன்னி.. உன் காலின் கீழ் பாரேன்.. என்றான் மீண்டும் அன்பாக..
அவள் ஏற்கனவே நாணமுற்று தலைகுனிந்துதான் இருந்தாள்
ஆனால் கண்களை மூடி இருந்தாள்