05-03-2023, 11:02 AM
கோபால் உருவத்திடம் எந்த அசைவும் மாற்றமும் இல்லை..
வடிவேல் பண்ணும் அத்தனை காமடி சேட்டைகளையும் செய்து காண்பித்து விட்டாள்
ஹும்ம்ஹும் ஒரு பலனும் இல்லை..
டையர்ட் ஆகி தன்னுடைய தொப்பியை கழட்டி விட்டு.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாடா.. முடியல.. என்று அமர்ந்துவிட்டாள்
அடுத்த ஆப்ஷன் கோபாலை கோபம் அடைய செய்து.. அவர் உணர்ச்சிகளை தூண்டுவது..
அழுவுறதுக்கும்.. சிரிக்கவைக்கிறதுக்குமே.. எவ்ளோ போராடி பார்த்தும் அவரிடம் எந்த அசைவும் இல்லை..
எப்படி கோபப்படுத்துவது.. ??
யோசித்தாள்.. யோசித்தாள்.. மண்டைக்குள் ஒன்னும் அகப்படவில்லை..
சரி டாக்டருக்கே ஒரு போன் போட்டு கேட்டுவிடுவோம்.. என்று முடிவெடுத்தாள்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. டாக்டர் வசந்த பாலன் போன் ரிங் போய்க்கொண்டே இருந்தது..