02-03-2023, 07:52 PM
டாக்டர் போனில் சொன்னதை யோசனை செய்து பார்த்தாள்
ரொம்ப சிரிக்கவைக்கணும்.. ரொம்ப அழவைக்கணும்.. ரொம்ப கோபப்படவைக்கணும்..
இந்த 3 ஆப்ஷனில் இப்போ அவள் சிரிக்கவைக்கும் மூடிலோ.. காமடி பண்ணும் மனநிலையிலோ இல்லை..
அதனால் கோபால் உருவத்தில் இருக்கும் கோபாலை எப்படியாவது அழவைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்
கிட்சன் சென்றாள்..
திரும்பி வரும்போது 4-5 பெரிய வெங்காயம் எடுத்து வந்தாள்
கோபால் முன்பாக டீபாயில் அமர்ந்துகொண்டு.. வெங்காய தோலை உரித்து உரித்து அவர் கண் முன்னால் காட்டினாள்
அவரிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை..
மீண்டும் கிட்சன் சென்று கத்தி எடுத்துவந்து டக் டக் டக் டக் என்று அந்த வெங்காயங்களை பொடிப்பொடியாக நறுக்க ஆரம்பித்தாள்
அவள் கண்களில்தான் தாரை தாரையாக கண்ணீர் வந்ததே தவிர.. கோபால் உருவத்தில் இருந்து அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை..