01-03-2023, 08:52 PM
இந்தாங்க உங்க பேக்
அவள் மகிழ்ச்சியுடன் வாங்கிகொண்டாள்
ரொம்ப தேங்க்ஸ்.. என்றாள் வினோத்தை பார்த்து
உங்களுக்கு தேங்க்ஸ் தவிர வேற வார்த்தை ஒன்னும் தெரியாதா..
சாரி.. என்றாள் அமைதியாக..
ஐயோ.. இதுக்கு உங்க தேங்க்ஸ்ஸே நல்லா இருந்தது.. என்று சொல்லி சிரித்தான் வினோத்
அவள் அதுக்கு சிரிக்கவில்லை.. அவன் சொன்னதை ஒரு ஜோக்காகவே அவள் நினைக்கவில்லை..
ரொம்ப சீரியஸ் டைப்போ.. ???
அவள் அமைதியாக இருந்தாள்
பிறகு நீண்ட நேரத்துக்கு பிறகு அவளாகவே கேட்டாள்.. நீங்க ஏன் எனக்காக என்னோட பேக் எடுத்துட்டு இறங்கி நீங்க போகவேண்டிய பஸ்ஸை மிஸ் பண்ணீங்க.. ?
அப்பாடா.. உங்களுக்கு இவ்ளோ நீளமா பேசத்தெரியுமா.. ??
ம்ம்.. உங்களுக்காகத்தான் நானும் இறங்கினேன்..
அப்போது பலமாக காற்று வீசியது..
இனிமே 3-4 மணி நேரம் கழிச்சிதான் அடுத்த பஸ் வரும்.. என்றான்..
உங்க பெயரை தெரிஞ்சிக்கலாமா.. ? அவனாகவே கேட்டான்..
மரியா.. என்றாள்
காற்று மீண்டும் பலமாக வீசி.. அவள் போட்டிருந்த முக்காடு அகன்றது..
வினோத் தேடிவந்த மரியாவின் முகம்.. அழகிய முகம்.. ஆசை முகம்.. அமைதியான முகம்..
ஐயோ.. நீங்க.. நீங்க மரியாவா.. ??
ஓ மை காட்.. இது கனவா நினைவா.. தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டான் வினோத்