28-02-2023, 02:20 PM
இவட ஒரு பஸ் நின்னு.. போயோ.. என்று அங்கே இருந்த ஒரு டி கடையில் விசாரித்தாள்
அவள் பேசியது மலையாளமாக இருந்தாலும்.. மூணாறை சுற்றி மலையாளம் கலந்த தமிழில் அனைவரும் பேசுவதால் டீக்கடைக்காரருக்கு எளிதாக புரிந்தது..
ம்ம்.. இப்போதாம்மா போச்சி.. அதுலதான் நீ வந்தியா.. என்று கேட்டார்
ஆமாம்..
இன்னும் ஒரு 2 மணி நேரத்துல அடுத்த பஸ் வரும் அதுல ஏறி போம்மா..
ஐயோ.. என் பணம் பேக் எல்லாம் அந்த பஸ்ல போயிடுச்சி.. என்றாள்
அதுக்கு என்னம்மா பண்ண முடியும்.. நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து ஏறி இருக்கணும்.. என்று சொல்லிவிட்டு டீ ஆத்துவதில் மும்முரமானார்
அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது..
அப்படியே தலையில் கைவைத்துக்கொண்டு ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டு இருந்தாள்
இந்த நடுஇரவில் என்ன பண்ணுவது.. கையில் பணம் இல்லை.. கண்ணீர் கண்களை பொத்துக்கொண்டு வந்தது..
அப்போது தூரத்தில் மங்கலாக ஒரு உருவம் அவளை நோக்கி நடந்து வந்ததை பார்த்தாள்
ஒரு கையில் சூட்கேசையும்.. இன்னொரு கையில் அவளுடைய பேக்கையும் எடுத்துக்கொண்டு வினோத் அவளை நோக்கி நடந்து வந்துகொண்டு இருந்தான்..