26-02-2023, 01:58 PM
மீசை முருகேசன் மருமகளை போலீஸ் கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி. அந்த ஆண்டிபட்டி கிராமத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டது..
30 மாட்டுவண்டிகளில் அடியாட்கள்..
7 டாட்டா சுமோவில் அடியாட்கள்..
மாட்டுவண்டிகளும்.. டாடா சுமோவின் டிக்கியிலும்.. கத்தி அரிவாள் வேல்கம்பு என்று பல ஆயுதங்கள் நிரம்பி இருந்தது.. கொஞ்சம் கன்னி வெடிகளும் எடுத்துக்கொண்டார்கள்
கைகால் விளங்காத மீசை முருகேசை தூக்கி ஒரு டாடா சியாராவில் ஏற்றினார்கள்.. மைனாவும் மீசை முருகேஷ்க்கு உதவியாக ஏற்றிக்கொள்ளப்பட்டாள்
சுமன் ஒரு சீயாராவில் ஏறினான்..
அத்தனை வண்டிகளும் கார்களும் புழுதி பறக்க ஆண்டிபட்டி காவல் நிலையத்தை நோக்கி படையெடுத்தது..
சுமன் தன்னுடைய கார் டேஷ் போர்டில் கைத்துப்பாக்கியை மறக்காமல் எடுத்து வைத்தான்
கோபத்தில் அவன் கண்களும் முகமும் சிவந்து இருந்தது...
சர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர் என்று காவல் நிலையம் வாசலில் அத்தனை வண்டிகளும் போய் சடன் பிரேக் போட்டு நின்றது..