25-02-2023, 10:15 AM
அவள் பயந்து நடுங்கி தன் நெஞ்சில் சாய்ந்ததும் வினோத் புரிந்துகொண்டான்..
அந்த முரடர்கள் இவளை தேடிதான் பஸ்ஸில் ஏறி இருக்கிறார்கள் என்று தெரிந்தது
அவர்களில் ஒருவன் வினோத் சீட் அருகில் வந்தான்..
வினோத்தை உற்று பார்த்தான்..
இது.. என்று அவள் உடம்பை காட்டினான்..
என்டா பாரியா (மனைவி).. உடம்பு சரி இல்ல.. என்றான் வினோத்
அவர்கள் அடுத்த அடுத்த சீட்டை செக் பண்ண சென்று விட்டார்கள்
டேய் இங்க அவ இல்ல.. அடுத்த பஸ்ல போய் இருப்பா.. வாங்க போய் பார்க்கலாம்.. என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அனைவரும் பஸ்ஸை விட்டு இறங்கி விட்டார்கள்..
அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சுடன் பஸ் மீண்டும் நகர துவங்கியது..
தேங்க்ஸ்.. என்றாள் அவன் போர்வைக்குள் இருந்து வெளியே வந்து..