21-02-2023, 10:51 PM
லக்ஷ்மியை அந்த ஜட்கா வண்டியில் ஏற்றி விட்டான் தலைவன்..
ஆனந்த் அவன் அமர்ந்திருந்த ஒற்றை குதிரையில் இருந்து இறங்கி.. ஜட்காவின் முன்பக்கம் உக்காந்து 4 குதிரைகளின் சேணத்தையும் பிடித்துக்கொண்டான்..
அவனுக்கு சேரவேண்டிய பங்கு மூட்டைகளை ஜட்காவின் பின்னல் இருந்த டிக்கி போன்ற ஒரு பெட்டியில் வைத்து மூடினார்கள்..
லட்சுமி ஜட்கா உள்ளே ஒரு வெள்ளைக்கார மகாராணி போல அமர்ந்துகொண்டாள்
உள்ள எல்லாம் வசதியா இருக்குல்ல லட்சுமி என்று கேட்டான் தலைவன்
ம்ம்.. இருக்கு தலைவரே.. என்றாள்
ஆனந்த்.. வண்டிய பார்த்து ஓட்டிட்டு போ.. அம்மா பின்னாடி உக்காந்து இருக்காங்க.. என்று ரொம்ப அக்கறையாக சொன்னான் தலைவன்
ஹாய் ஹாய்.. என்று ஆனந்த் அந்த 4 குதிரைகளையும் அடித்து ஜட்கா வண்டியை ஸ்டார்ட் பண்ணான்
வண்டி ஒரு சிறிய குலுங்களுடன் புறப்பட்டது...
வழியில் வர போகும் ஆபத்தை அறியாமல் அந்த ஜட்காவண்டி கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் எடுத்தது..