21-02-2023, 11:33 AM
லக்ஷ்மியின் சத்தத்தை கேட்டு கொள்ளை கூட்ட தலைவனும்.. மற்ற கொள்ளையர்களும் குகை விட்டு வெளியே வந்தார்கள்
லக்ஷ்மியை குதிரையில் இருந்து பத்திரமாக கைபிடித்து இறங்கிவிட்டார்கள்..
டேய் ஆனந்த்.. குதிரை மேல உன் அம்மா போறது பாதுகாப்பு இல்ல..
போறவழியில கீழ ஏதும் விழுந்துட்டா கஷ்டமா போய்டும்..
இரு இதுக்கு ஒரு ஐடியா பண்றேன்.. என்று தலைவன் யோசித்தான்..
அவன் மண்டைக்கு மேல டொய்ங் என்று ஒரு காட்டூன் ஒரு பல்பு எரிந்தது..
ம்ம்.. ஐடியா வந்துடுச்சி.. என்று சொல்லி அருகில் இருந்த சில கொள்ளைக்கூட்ட ஆட்களிடம் காதில் ஏதோ குசுகுசு என்று சொன்னான்..
லக்ஷ்மியும் ஆனந்தும் ஒன்றும் புரியாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டார்கள்..
சிறிது நேரத்தில் ஒரு அந்த காலத்து ஜட்கா என்று சொல்லப்படும் குதிரை வண்டி வந்து அவர்கள் முன்பாக நின்றது..
கௌ பாய்ஸ் படங்களில் வருவது போல 4 குதிரைகள் பூட்டிய ஒரு ஜட்கா சாரட் வண்டி அது..