19-02-2023, 08:18 PM
அந்த சொகுசு பஸ் அந்த ஹைவேஸ் ரோட்டில் படுவேகமாக போய்க்கொண்டு இருந்தது..
டிரைவர் ரொம்ப கவனமாக ஒட்டிக்கொண்டு இருந்தார்
தூரத்தில்.. நடுரோட்டில் ஏதோ ஒரு உருவம் மங்கலாக தெரிந்தது..
டிரைவர் சுதாரித்துக்கொண்டு சடன் பிரேக் போட்டு நிறுத்தினார்..
சார் பிளீஸ் பிளீஸ் பஸ் நிறுத்துங்க.. பஸ் நிறுத்துங்க.. ஒரு பெண் அவசரமாக மூடி இருந்த பஸ் கதவை தட்டினாள்
முகம் முழுவதும் குரங்கு குல்லாய் போட்டு மறைத்து இருந்தாள்
உடல் அழகாக இருந்தாலும்.. முகம் சரியாக தெரியவில்லை..
ஏம்மா.. எங்க போனும்.. இப்படி நடுரோட்ல பஸ் நிறுத்துறியே.. என்று பஸ் கிளீனர் பாய் சலித்துக்கொண்டே பஸ் கதவை திறந்து விட்டான்..
இந்த பஸ் எங்க போகுது..
மூணாறு.. என்றான் கிளீனர்.. நானும் மூணாறு தான் போகணும்.. என்று அவள் அவசரமாக பணத்தை கிளீனர் கையில் திணித்துவிட்டு பஸ் வெளியே எட்டி எட்டி பார்த்தபடி பயந்து பயந்து உள்ளே ஏறி வந்தாள்