19-02-2023, 06:43 PM
லட்சுமிக்கு குதிரை ஓட்டி பழக்கமில்லை..
ஓட்டி என்ன.. குதிரைமேல் ஏறியே பழக்கமில்லை அவளுக்கு..
எப்போதாவது சொந்தக்காரர்கள் கல்யாணத்துக்கு சென்னைக்கு கணவன் சுமனுடன் சென்றாள் மெரினா பீச்சுக்கு போவார்கள்..
அப்போது ஒரே ஒரு முறை பீச் மணலில் குதிரை ஏறி இருக்கிறாள்
அப்பாடா.. ஒரு ரவுண்டு போய் வருவதற்குள்.. அவள் வாயிற் வேறு.. குடல்வேராகி விட்டது.. புரட்டி எடுத்துவிட்டது.. பீச்சில் ஒரே வாந்தி
அதில் இருந்து குதிரை என்றால் லக்ஷ்மிக்கு ரொம்ப அலர்ஜி..
ஆனால்.. இப்போது 3 குதிரைகளில் ஒரு குதிரையில் அவளை ஏற்றி உக்காரவைத்து இருந்தார்கள்..
மெல்ல 3 குதிரைகளும் ஆண்டிபட்டி கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தது..
டேய் ஆனந்த்.. ஆனந்த்.. எனக்கு பயமா இருக்குடா.. என்று கத்தினாள்..
கொள்ளையர்க்கூட்ட குகையைவிட்டு ஒரு 10 அடி தான் குதிரை நடந்து இருக்கும்.. அதற்குள் லட்சுமி பயத்தில் கத்த ஆரம்பித்தாள்