19-02-2023, 03:15 PM
ரெண்டு படமும் பார்த்தேன் மேடம்..
ஆனா தலை நடிச்ச துணிவு செம ஆக்ஷன் பிளாக் மூவி மேடம்..
தளபதி விஜய் நடிச்சது குடும்ப செண்டிமெண்ட் படம் மேடம்..
துணிவுதான் அடுத்தது என்ன.. அடுத்தது என்னன்னு ரொம்ப திரில்லிங்கா போச்சி..
இந்த முறை தல ஆக்ஷனும்.. ரொம்ப ரொம்ப வித்யாசமா.. இருந்தது மேடம்
அமராவதில நடிச்ச அமைதியான அஜித்தா இந்த படத்துல இப்படி அட்டகாசம் பண்ணி இருக்காருன்னு நினைக்கிற அளவுக்கு அசத்தி இருப்பாரு மேடம்..
வாரிசுல விஜய் வழக்கமா அரைச்ச மாவையே அரைக்கிறமாதிரியே இருக்கு மேடம்..
ஆனா தளபதி டான்ஸ் யாராலும் அடிச்சிக்க முடியாது மேடம்..
இந்த வயசுலயும் மனுஷன் சும்மா துள்ளி குதிக்கிறார்.. அஜித்க்கு டான்ஸ்ல ஸிரா மேடம்.. இருந்தாலும் இதுலயும் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் ஒன்னு சூப்பரா ஆடி இருப்பாரு. இருந்தாலும் தலைக்கு எப்போதுமே ஆக்ஷன்தான் பெஸ்ட்
வனிதா உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்.. தூக்கம் வரக்கூடாதேன்னு பேச்சு குடுத்தா டிரைவர் வாசு தலையா தளபதியான்னு ஒரு பட்டிமன்றமே நடத்துறானே என்று நினைத்து சிரித்துக்கொண்டே ம்ம்.. ம்ம்.. என்று உம் கொட்டிக்கொண்டே வந்தாள்