19-02-2023, 11:50 AM
(18-02-2023, 02:13 AM)psprabhu1508 Wrote: அனைவருக்கும் வணக்கம்,
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இந்த பதிவு கதை அல்ல, எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி இதனை யாரேனும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை.
இந்த தளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கின்றனர், அதில் சிலர் அவர்கள் எழுதிய கதைய பாதியிலேயே அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர், மிக சிலரே தொடர்ந்து கதை எழுதுகிறார்கள்.
அந்த மிக சிலர் எழுத்தாளர்களின் எழுத்தும் மிக அருமையாக உள்ளது
இது ஒரு உதாரணம் தான்: இந்த தளத்திற்கு எப்போது் வந்தாலும் முகப்பு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பதிவுகள் மட்டுமே வருகிறது. இன்று அதனை எண்ணியும் பார்த்தேன், முகப்பு பக்கத்தில் மொத்தம் 46 பதிவுகளை காணலாம், அதில் 22 பதிவுகள் அனைத்தும் அந்த ஒரு எழுத்தாளருக்கே சொந்தமானது. அந்த 22 பதிவுக்கும் உள்ளே சென்று பார்த்தால், update, thanks, இது தான் பிரதானமாக உள்ளது. கதையை பற்றிய update எதுவும் இல்லை.
உண்மையிலே update மற்றும் thanks சொல்ல வேண்டும் என்றால் அதனை குறுஞ்செய்தி அனுப்பி சொல்லிக்கலமே, ஏன் அந்த update இல்லாத பதிவுகளுக்கு, தளத்தில் வந்து thanks and update கூறி அந்த பதிவுகளை உயிர்ப்போடு தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்று புரியவில்லை.
இதனால் என்ன ஆகிறது என்றால், இந்த தளத்தில் தொடர்ந்து கதை எழுதுபவர்களின் பதிவுகள் பின்னுக்கு செல்கிறது, அவர்கள் கதையை பின்தொடரும் வாசகர்கள் 2 அல்லது 3ஆம் பக்கத்திற்கு வரை தேடிச்சென்று படிக்க வேண்டிய நிலை வருகிறது, இங்கே நெறய பேர் login செய்யாமல் கதைகளை படிப்பவர்கள் தான், அவர்கள் இப்படி தேடிச்சென்று எப்போதும் படிப்பர்களா என்பது சந்தேகமே. அதனால் அருமையான கதைகளுக்கு பார்வைகள் குறையும் அதன் விளைவு எழுத்தாளர்களின் ஆர்வம் குறையும், கதையும் அவர்களிடம் இருந்து வராது.
எனவே நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தொடர்ந்து update கொடுக்கப்படும் கதைகளுக்கு update அல்லது பாராட்டுக்களை கருத்துரை பகுதியை பயன்படுத்தி கேளுங்கள், update இல்லாத பதிவுகளுக்கு கதையின் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி மூலியமாக கேளுங்கள். இதனால சாதாரணமான என்னை போன்ற வாசகனும் பலன் அடைவான், நீங்கள் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால், உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் உருவாகும்.
இது ஒரு சாதாரண வாசகனின் வேண்டுகோள். வேண்டுகோள்.
நன்றி வணக்கம்
வணக்கம் நண்பா
சாரி இந்த திரட்டை இன்றுதான் பார்த்தேன்
உங்கள் சிரமம் பாராது நேரம் ஓத்துக்கி என்னை நினைவு கூர்ந்து எனக்காக என் பெயர் நிலைத்து நிக்க இப்படி ஒரு பகுதி ஆரம்பித்து இருப்பது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் நண்பா
நான் எழுதும் கதைகளுக்கு கமெண்ட்ஸ் வராவிட்டாலும் இந்த திரெடில் ஒவ்வொரு பதிவிலும் என்னை பற்றிய விஷயங்கள் பகிரப் பட்டுக்கொண்டே இருக்கும் என்பது எனக்கு பெருமையே
எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை எனக்கு அளித்து இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியே நண்பா
என்னை திட்டினாலும் பாராட்டினாலும்.. எதுவாக இருந்தாலும் என்னை பற்றியோ என் கதையை பற்றியோ அல்லது என் பதிவை பற்றியோ கமெண்ட்ஸ் வந்துகொண்டே இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நண்பா
இந்த முயற்சியால் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னுள் மாற்றி கொண்டேன் நண்பா
கமெண்ட்ஸ் போட்டால் யாருக்கும் தேங்க்ஸ் போடக்கூடாது என்ற உங்கள் கட்டளையையும் படங்கள் பதிவிடக்கூடாது என்ற உங்கள் விருப்பத்தையும் தெரிந்து கொண்டேன் நண்பா
அதனால் இனி என் கதைகளுக்கு பதிவு மட்டுமே இருக்கும்.. மற்ற எந்த தேவை இல்லாத சிலுமிஷன்களும் இல்லாத வகையில் முயற்சி பண்ணுகிறேன் நண்பா
ஆனால் 10 வரிகளுக்கு மேல் இருக்காது.. அதில் மட்டும் உருத்தியாக இருக்க விரும்புகிறேன்.. என்னுடைய கன்னித்தீவு பதிவுகள் மட்டுமே இருக்கும்
காரணம் பக்கம் பக்கமாக எழுதுபர்களுக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை
நோகாமல் 10 நோம்பு மட்டுமே கும்பிடும் எனக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை
சிரமப்படாமல் எழுதும் எனக்கு அதனால் பெரிய பாதிப்பு ஒன்று அவ்ளோவாக இல்லை
பக்கம் பக்கமாக எழுதி விட்டு கமெண்ட்ஸ்க்காக காத்திருக்கும் நண்பர்களை தயவு செய்து இது போல தனியாக அவர்கள் பேரில் தனி திரட் போட்டு அவர்களையும் உற்சாக படுத்த வேண்டும் என்றும் மிக தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் நண்பா
என் கதைகளை தவிர என்னை பாராட்டியும் படுகேவலமாக கழுவி ஊத்தியும் இன்னும் நிறைய தனிதிரட்கள் எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நிறைய நண்பர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதும் எனக்கு பெருமைகுறிய விஷயமே நண்பா
எவருக்கும் கிடைத்திராத மாபெரும் அங்கீகாரம் இது எனக்கு..
நன்றி சொல்ல பெரிதும் கடமை பட்டு இருக்கிறேன்
என் கதைகளை எழுதுவதை எப்படி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எனக்கு நிறைய ஆலோசனைகள் தேவை படுகிறது நண்பா
அப்போது தான் மற்ற எழுத்தாளர்களை போல கதையை பாதியிலேயே நிறுத்த எனக்கும் வசதியாக இருக்கும்
இந்த திரெட் கண்டிப்பாக எனக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
நன்றி வணக்கம்