11-02-2023, 10:15 AM
ஏய்.. ஏய்.. என்று தூரத்தில் ஒரு சத்தம் கேட்டது..
வினோத் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தான்..
அப்பாடா.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.. யாரும் இவளை கடத்தல
சவிதா ஒரு சின்ன துள்ளலுடன் கை அசைத்து அவள் நின்று இருந்த இடத்துக்கு வருமாறு சைகை காட்டினாள்
வினோத் அவள் நின்று இருந்த இடத்தை நோக்கி பைக்கை மெல்ல செலுத்தினான்..
மிட்நைட்டில் சைக்கிளில் டீ விற்பவனிடம் டீ வாங்கி குடித்து கொண்டு இருந்தாள்
மெல்லிய டீ ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட்டில் மார்டனாக இருந்த அவள்.. அந்த லோக்கல் டீ கப்புடன் நிட்டிருந்தது ரொம்ப வித்தியாசமாக இருந்தது..
ஏண்டி.. நான் வர்றவரை வெய்ட் பண்ண முடியாதா.. லோக்கலா இப்படி கன்றாவிய வாங்கி குடிக்கிற.. என்று உரிமையோடு திட்டினான்
காபி ஷாப் கூட்டிட்டு போய் இருப்பேன்ல..
டேய் லூசு.. இந்த நேரத்துல எவண்டா கடை தொறந்து இருப்பான்.. என்று திட்டிக்கொண்டே அந்த டீ கப்பை கையில் வைத்துக்கொண்டே பேலன்ஸ் பண்ணி அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் சவிதா..