09-02-2023, 05:43 PM
மகேசும் புவனசுந்தரியும் வீட்டின் பின்பக்கம் வழியாக பதுங்கி பதுங்கி வெளியே வந்தார்கள்..
நல்லவேளை கையில் ஏ.கே 47 னுடன் நின்றுகொண்டு இருந்த தீவிரவாதிகள் முன்பக்க வாசலை உடைத்து தகர்த்து பெயர்த்து உள்ளே நுழைய போராடிக்கொண்டு இருந்தார்கள்
மகேசும் புவனசுந்தரியும் பின்பக்கம் வெளியேறியதை அவர்கள் கவனிக்கவில்லை
மகேஷ் கொண்டு வந்த டிவிஎஸ் 50 மெய்ன் கேட் வாசலின் முன்னே நின்றுகொண்டு இருந்தது..
அக்கா.. நீங்க காம்பவுண்டு பின் பக்கம் வந்து நில்லுங்க.. நான் நைசா நம்ம டிவிஎஸ் 50யை எடுத்துட்டு வந்துடறேன்.. என்று சொன்னான்..
மகேஷ் சொன்னதை கேட்ட புவனசுந்தரி.. சரி தம்பி.. ஜாக்கிரதை.. பார்த்து போய்ட்டுவா.. என்று எச்சரித்து விட்டு பின் பக்க காம்பவுண்ட் சுரின் மேல் ஏற முயன்றாள்
ஆனால் அவளால் அந்த பெரிய காம்பவுண்டு சுவரின் மேல் அவ்ளோ சுலபமாக ஏற முடியவில்லை..
அக்கா நான் ஹெல்ப் பண்றேன் என்றான் மகேஷ்
ம்ம்.. எப்படி என்றாள் புவனசுந்தரி
மகேஷ் புவனசுந்தரி முன்பாக ஒரு கால் மடக்கி மண்டியிட்டு அமர்ந்தான்..