04-02-2023, 08:36 AM
அதிகாலை மணி 4.12 இருக்கும்..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. நன்றாக தூங்கி கொண்டு இருந்த வினோத்தின் மொபைல் சிணுங்கியது..
கொர்ர்ர்ர்.. கொர்ர்ர்ர்ர்ர்.. என்று என்னதான் குறட்டைவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும்.. மொபைலின் அந்த சின்ன சத்தம்கூட அவனை துகில் களைய வைத்து விட்டது..
கண்களை மூடிக்கொண்டே படுக்கையில் கையை வைத்து தடவி தடவி மொபைலை தேடினான்..
கடைசியில் தலையணைக்கு அடியில் அவன் மொபைல் சிக்கியது (எச்சரிக்கை : மொபைலை நம் தலைக்கு அல்லது உடலுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டு படுப்பது மிகவும் ஆபத்தானது..)
கண்களை லேசாய் திறந்து அந்த மொபைல் வெளிச்சத்தில் மின்னிய உருவத்தை பார்த்தான்..
ஹேய்.. சவிதா.. என்று தன்னையறியாமல் ஒரு புது சந்தோசம் அவன் மனதை நிரைத்துக்கொண்டது..
இந்த நேரத்துல எதுக்கு இவ கால் பண்றா
ஹேய் சவி.. சொல்லுடி.. என்ன இந்த நேரத்துல..
டேய் வினோ.. நான் பொள்ளாச்சி மெயின் பாஸ்ட்டாப்ல வந்து இறங்கிட்டேன்டா.. பிக் அப் பண்ண சீக்கிரம் வாடா.. என்றாள் சிணுங்களான வாய்ஸில்